Sunday, September 12, 2010

ஜோக்ஸ்

________________________________________


"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."

"உடம்பு நல்லா இருந்தா...?"

"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"

எஸ்.ஏ.கருணாநிதி, ஓசூர்

________________________________________

"டாக்டர்.... சாதம் சாப்பிட்டா வெயிட் போடுவோமா?"

"இல்லியே, வெயிட் போட்டாத்தான் சாதமே சாப்பிட முடியும்...!"

"நீங்க என்ன சொல்றீங்க...?"

"நான் குக்கர்ல போடற வெயிட்டை சொல்றேன்!"

கூடல்

________________________________________

"விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, "பேசாம" நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே!"

"பேசாம" எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?"

கூடல்

________________________________________

போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?

திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.

எம்.எஸ்.ராஜப்பா

No comments:

Post a Comment