Tuesday, September 14, 2010

கையெழுத்து


1. "அந்த டாக்டர் ஆபரேஷனுக்கு என்ன வாங்குவாரு...?"
"உயிரை வாங்குவாரு!"

2. "டேய் நாளைக்கு பெண் பார்க்கப் போறேன். கண்டிப்பா நீயும் வரணும்?"
"ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா."

3. "தலைவர் மணலை இப்போ சுத்தமா கடத்தறதில்லையாமே?"
"ஆமாம்! அதுலயும் கலப்படம் பண்ணித்தான் கடத்துவார்!"

4. "கோழிக் கிறுக்கல் மாதிரி கையெழுத்துப் போடுற நம்ம தலைவர் இப்பத் தெளிவா கையெழுத்துப் போடுறாரே எப்படி?"
"காலையும் மாலையும் போலீஸ் ஸ்டேஷனுல தொடர்ந்து கையெழுத்துப் போட்டாருல்ல, கையெழுத்து திருந்திட்டுது!"


No comments:

Post a Comment