2012-ம் ஆண்டில் உலகம் அழியும் என "ஹாலிவுட்" படங்கள் கூறிவரும் வேளையில், அப்படி ஒரு அழிவிற்கு வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொல்ல வருகிறது, ஒரு தமிழ்ப்படம். அந்த படத்தின் பெயர், "சரவண பவ." கலியுக கடவுள் கந்தனின் அவதாரத்தாலும், அருளாலும் உலக அழிவு தடுக்கப்படும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது, இந்தப் படம். பூர்வ ஜென்மம், பில்லி-சூன்யம், மாந்திரீகம் ஆகியவை உலகில் இருந்தாலும், அவைகளுக்கு தீர்வும் உண்டு என்பதை கதை சித்தரிக்கிறது. "சரவண பவ" படத்தில் பாலமுருகனின் அவதாரமாக மாஸ்டர் கதாமா சபரீஸ்வரன் நடிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் சதீஷ், செல்வராஜ், பாரதி, தேசிங்குராஜா, காளை, மீனாட்சி மைந்தன், தீபா உள்ளிட்டவர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜீவன் ஒளிப்பதிவு செய்ய, இந்தியன் இசையமைக்கிறார். மீனாட்சி மைந்தன் பாடல்கள் அனைத்தையும் எழுதியிருக்கிறார். இவர்தான் படத்தில் மந்திரவாதியாகவும், சாமியாராகவும் இரட்டை வேடம் கட்டியிருக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குகிறார், ஆதவன். மூலக்கதை-தயாரிப்பு: அந்தமான் டி.ஆர்.எஸ்.ரமணி அய்யர் சுவாமிகள். இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்றது. முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment