பரத், பாவனா, சந்தியா நடித்த "கூடல் நகர்" படத்தை இயக்கிய சீனு ராமசாமி அடுத்து, "தென்மேற்கு பருவக்காற்று" என்ற புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சேது-வசுந்தரா ஆகிய இருவரும் இளம் ஜோடிகளாக அறிமுகம் ஆகிறார்கள். சரண்யா, ஒளிப்பதிவாளர் தாஸ், ஸ்டில்ஸ் குமார், எழுத்தாளர் அஜயன்பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் மதுரை-தேனி பகுதிகளை சேர்ந்த மண் மணம் மாறாத மனிதர்களும் பங்குபெறுகிறார்கள். கார்த்திக்ராஜா இசையமைக்கிறார். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு: எம்.காசிவிஸ்வநாதன், பாடல்கள்: அறிவுமதி, பழனிபாரதி, நாமுத்துக்குமார், சண்டைப்பயிற்சி: சூப்பர் சுப்புராயன் கதை-திரைக்கதை-வசனம் எழுதி, இயக்குகிறார் சீனு ராமசாமி. ஜோதம் மீடியா ஒர்க்ஸ் சார்பில் கேப்டன் ஷிபு ஐசக், இந்த படத்தைத் தயாரிக்கிறார். தென்மேற்கு பருவக்காற்று என்பது கம்பம்-தேனி பகுதிவாழ் மக்களின் வாழ்வை திசை திருப்புகிற வாழ்வாதாரங்களுள் ஒன்று. அந்த மக்களின் வாழ்க்கையை-பாசப்பிணைப்பை புதிய ரசனையுடனும், சாமான்ய மக்களின் பெருங்கருணையை கலாச்சார வடிவமைப்புடனும் விவரிக்கும் படம் இது. தமிழ் சினிமாவின் சிறந்த கிராமத்துப் பதிவுகளில் இந்தப் படம் முக்கியப் பங்கு வகிக்கும் என்கிறார், இயக்குநர் சீனு ராமசாமி
No comments:
Post a Comment