1. "எப்போதும் இருக்கற மாதிரி இயல்பா இருந்தா போதும், நடிக்கவே தேவையில்லைன்னு சொல்றீங்களே.... அப்படி என்ன சார் என்னோட கேரக்டர்...?"
"இந்தப் படத்துல நீங்க பேயா நடிக்கப் போறீங்க...!"
2. "உங்க கணவர் பிறவியிலேயே ஊமையா?"
"இல்ல டாக்டர்... கல்யாணத்துக்கு அப்புறந்தான் இப்படி ஆயிட்டாரு!"
3. "என் கணவர் குடிச்சிட்டு வந்தா, நான் பக்கத்துலயே போகமாட்டேன்..."
"அதான் அவர் தினமும் குடிச்சிட்டு வர்றாரா..?"
4. "இன்னைக்கு வெயில் ரொம்ப அதிகமா இருக்கு... நீங்க ஆபீஸ் போக வேண்டாங்க!"
"என்னை நம்பு செல்லம்... சத்தியமா எனக்கு வத்தல் போடத் தெரியாது!"
5. "நான் பொண்ணு பார்க்கறதுக்கு முன்னாடியே, என் பையன் ஒருத்தியை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டான்..."
"நீ என்ன செய்தே...?"
"வேற வழியில்லாம, அவ கூடத்தான் சண்டை போட்டுக்கிட்டிருக்கேன்!"
No comments:
Post a Comment