வாடா போடா நண்பர்கள்
நட்புக்கும், காதலுக்கும் முடிச்சு போட்டு, 'வாடா போடா நண்பர்கள்" என்ற புதிய படம் தயாராகிறது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் மணிகை, இந்த படத்தின் மூலம் இயக்குநராகிறார். மகேஷ் முத்துசுவாமியிடம் உதவி ஒளிப்பதிவாளராக இருந்த அருண் ஜேம்ஸ் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார். மும்பை திரைப்பட கல்லூரி மாணவர் சித்தார்த், இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். 'புகைப்படம்" படத்தில் கதாநாயகனாக நடித்த நந்தா, பிரகாஷ்ராஜின் 'இனிது இனிது" படத்தில் நடித்த ஷரன் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். பெங்களூரைச் சேர்ந்த யஷிஹா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, ஸ்ரீநாத், கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். 8 பாய்ண்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சிங்கப்பூரை சேர்ந்த பி.அருமைச்சந்திரன் தயாரிக்கிறார். படம், வேகமாக வளர்ந்து வருகிறது.
No comments:
Post a Comment