Wednesday, September 29, 2010

சிறுத்தை

கார்த்தி நடித்த பருத்தி வீரன், நான் மகான் அல்ல ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம், ஸ்டூடியோ கிரீன். இந்த நிறுவனமும், கார்த்தியும் 'சிறுத்தை' என்ற படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இதில், கார்த்தி ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இவர்களுடன் காமெடிக்கு முதல்முறையாக சந்தானம் கை கொடுக்க வருகிறார். முதன்முதலாக கார்த்தி இரட்டை வேடங்களில், இந்த படத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் ஷிவா, இந்த படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராகிறார். இவர், மஜ்னு, மனசெல்லாம், பத்ரி, சார்லி சாப்ளின் உள்பட 28 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சவுரியம், சங்கம் ஆகிய 2 தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வித்யாசாகர் இசையமைக்கிறார். எடிட்டிங்: ஆண்டனி. கலை: ராஜீவன். பாடல்கள்: அறிவுமதி, நா.முத்துக்குமார், விவேகா. தயாரிப்பு: கே..ஞானவேல் ராஜா, இணை தயாரிப்பு: எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, ஐதராபாத், கர்நாடக மாநிலம் பதாமி ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது. பாடல் காட்சிகளை கிரீஸ், அயர்லாந்து ஆகிய இடங்களில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment