Tuesday, January 18, 2011

என் ஜோடி யாருனே தெரியல! - பிரசன்னா

மதுரையில் ஆடுகளத்தை ரசித்த தனுஷ்

ரஜினிக்கு நெருக்கடி கொடுக்கும் 'ஹரா'

Friday, January 14, 2011

பெண் குழந்தைகள் மீது சமூகம் நிகழ்த்தும் வன்முறை

பெண் குழந்தைகள் மீது சமூகம் நிகழ்த்தும் வன்முறை!
Child victims of sexual abuses - Tamil Poltics News Article கோயம்புத்தூரில் நவம்பர் மாதம் இரு குழந்தைகளைக் கடத்தி அதில் பெண் குழந்தையைப் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தி, அவ்விருவரைக் கொலை செய்யப்பட்டது தமிழகத்தையே உலுக்கிய செய்தியாக அனைவரையும் உறைய வைத்தது. இந்தக் கொலை நடந்த பன்னிரண்டாவது நாளே இக் கொலையின் முக்கிய குற்றவாளி காவல் துறையின் போலி மோதல் நாடகத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் செய்தி முந்தையதைக் காட்டிலும் நம்மை அதிகம் பாதித்தது.
நீதிமன்றங்களையும், மனித உரிமையையும் கேலிக்குரியதாக்கி காவல்துறை கோரமாக இந்தப் படுகொலையை நடத்தியது. குற்றவாளியைச் சுட்டுக் கொன்றுவிட்டால் குற்றங்கள் குறைந்துவிடும் என்ற பொதுப் புத்தியிலிருந்து சற்றும் விலகாத மக்கள் காவல்துறைக்கு வீர வணக்கச்(?) சுவரொட்டிகளைக் கோவை முழுவதும் ஒட்டினர்.
ஆனால் இந்தப் படுகொலை நடந்த நான்காவது நாளே பொள்ளாச்சி அருகிலே கோட்டூர் என்ற ஊரில் 9 வயதுடைய நான்காம் வகுப்புச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். சேலம் பள்ளியொன்றில் ஜோதிமணி என்ற 10 ஆம் வகுப்பு மாணவி பள்ளியிலேயே தற்கொலை செய்து கொண்டாள். அவரது உடற்கூறு ஆய்வில் அவரது கருப்பையில் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் விந்தணு இருந்ததாகத் தெரியவர அதிர்ந்து போயினர் பெற்றோர். இதைத் தொடர்ந்து திருப்பள்ளியூர் என்னுமிடத்தில் 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டு ஊரின் நடுவே உள்ள தண்­ர் தொட்டியின் அருகில் தூக்கி வீசப்பட்டுள்ளாள். இந்த நவம்பர் மாதம் மட்டும் தமிழகத்தில் நான்கு பெண் குழந்தைகள் வன்புணர்வு செய்யப்பட்டு அதில் மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக முன் கூறப்பட்ட மூன்று செய்திகளும் கோவையில் மோகன்ராஜ் என்ற விசாரணைக் கைதி சுட்டுக் கொல்லப்பட்ட பின்பே நடைபெற்றுள்ளன. குற்றவாளிகள் குறையவில்லை, அதிகரித்துள்ளனர். அதிலும் இவை செய்தி ஊடகங்களின் பார்வையில் சிக்கியவை மட்டுமே ஆகும்.
இன்னும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகைய ஒவ்வொரு குற்றங்கள் நடைபெறும் பொழுதும் குற்றவாளிகளைக் காமக் கொடூரன், காமவெறி பிடித்த கயவன் என்று திட்டித் தீர்த்து ஊடகங்களும், பொதுமக்களும் நிறைவு கொள்கின்றனர். மேலும் ஒருபடி மேலே சென்று இத்தகையவர்களுக்கு அரேபிய நாடுகளில் வழங்கப்படும் தண்டனையை வழங்க வேண்டும் என வசன மழை பொழிகின்றனர். காமக் கொடூரன், காமவெறி பிடித்த கயவன் என்று திட்டித் தீர்ப்பதன் மூலமும் அவர்களைச் சிறையிலே அடைப்பதன் மூலமும் இத்தகைய குற்றங்கள் குறைந்து விடும் என்றே நம்பிக் கொண்டுள்ளனர். இத்தகைய பாலியல் வன்முறைகள் நடப்பதற்கான அடிப்படைக் காரணம் என்ன என்று சிந்திக்கிற மனநிலை கூட இங்கு எவருக்கும் இல்லை. பாலுறவு என்பது என்ன? அதை உள்ளடக்கிய பாலியல் என்பது என்ன? என்பதைப் பற்றிப் பேசுவதென்பதே மிகவும் கமுக்கமானதாகவும், பேசப்படக் கூடாத ஒன்றாகவும் இருக்கிறது. அதுதான் பண்பட்ட நிலை என்று இந்துப் பார்ப்பனப் பண்பாடு வரையறுத்துவிட்டது. இந்தப் பண்பாட்டின் மீதான ஒரு சிறு கீறலைக் கூட அது விரும்பவில்லை.
ஒரு மனிதன் தம்மின் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தலாம். ஆனால் பாலுணர்ச்சியை வெளிக் கூறுவதென்பது மிகவும் கேவலமானதாகக் கருதப்பட்டு வருகிறது. இங்கே பெண்களின் மீது திணிக்கப்பட்டுள்ள கற்புக் கோட்பாடும், ஆண்களுக்குள்ள சுதந்திரமுமே இத்தகைய குற்றங்கள் நடைபெற முகாமையான காரணமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. இப்படிப்பட்ட பண்பாடானது அந்த பண்பாட்டைக் கடைப்பிடிக்கிற மக்களுக்கெதிரானதாகவே மாறி அம்மக்களின் மீதே தன் கோரப் பற்களைப் பதித்திருக்கிறது.
பாலியல் என்பது என்ன? அது எவ்வயதிலிருந்து அவசியமாகிறது என்ற குறைந்தபட்ச அறிவு கூட இங்கே வழங்கப்படாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும். பாலுணர்வு என்பது அடிப்படையில் மனம் சார்ந்த செயலாக இருப்பதால் அதன் தேவை மற்றும் வெளிப்படுதல் என்பது அம்மனத்தை வடிவமைக்கிற புறச் சூழல்களை அடிப்படையாகக் கொண்டே எழுகிறது. எள்ளளவும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் அருவருக்கக் கூடியதாகவும் உள்ள இந்தக் குமுகாயச் சூழலில் பண்பட்ட ஒரு பாலியல் வெளிப்பாட்டை எவராலும் எதிர்பார்க்க முடியாது. இதுதான் பண்பட்ட பாலியல் என்று இந்துப் பார்ப்பனப் பண்பாடு உச்சமாய்த் தலையில் தூக்கிப் பிடிப்பது குடும்ப அமைப்பு முறையையே ஆகும். குடும்பம் என்ற ஒன்று அமைந்த பின்னரேதான் ஒவ்வொருவரின் பாலுணர்வும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயத்தை இந்தக் குமுகாயம் பின்பற்றி வருகிறது.
இத்தகைய கட்டாயமே பாலுணர்வு என்பதை வெறியாக வளர்த்தும் இந்தக் குடும்ப அமைப்பில் உள்ளவர்களாலேயே வன்மங்களை அரங்கேற்றியும் வருகிறது. மனம் விரும்பும் ஒருவருடன் உறவு என்பது மாறி உடல் உணர்ச்சிக்கு ஒருவர் உடனடித் தேவை என்ற நிலையில் பிறரை வன்புணர்வுக்கு அவர்களின் அனுமதியின்றிப் புணர்கிற பாலியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த வன்மம் எவரென்றும் பார்க்காது, அது பிறந்த குழந்தை என்பதைக் கூட.
பண்பாடு என்று இங்கே கட்டமைக்கப்படுவதெல்லாம் யாரோ ஒரு சாராரின் வசதிக்கானது மட்டுமே. சாதியாலோ, வர்க்கத்தாலோ, இனத்தாலோ ஏதாவது ஒரு பிரிவினர்க்கு நலம் சேர்க்கும் வகையில்தான் இங்குள்ள பண்பாடுகள் அனைத்துமே கட்டமைக்கப்படுகின்றன. அனைவருக்கும் பண்பாடு என்றெல்லாம் எதுவுமே இல்லை.
சமூகத்தின் பரிணாமத்தில் என்று தனியுடைமை வலுவடைந்ததோ, சொத்துரிமை அதற்கான வாரிசுரிமை அமைப்புகள் வலுவடைந்தனவோ அன்றிலிருந்து பாலியல் சுரண்டல்களும் தொடங்கி விட்டன. தனியுரிமை வாரிசுரிமை அமைப்பானது மனிதனின் பாலியலை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகிறது. எல்லையை வரையறை செய்கிறது. இந்தக் கட்டுப்பாடானது முறைப்படுத்துதல் அல்லது வரையறைக்குட்படுத்துதல் என்றில்லாமல் வெறுமனே அடக்கி வைத்தல் என்ற அளவில்தான் உள்ளது.
பாலின்பம் என்பது உயிரினங்களின் அடிப்படைத் தேவை. இதை வெறுமனே அடக்கி வைத்தல் என்பது அவ்வளவு எளிதானதல்ல. இங்குத்தான் கற்புக் கோட்பாடுகளும், பண்பாட்டுப் புனிதங்களும் தேவைப்படுகின்றன. மனமொத்த இருவருக்கிடையில் நிகழ வேண்டிய பாலுறவானது இந்தச் சாதியைச் சேர்ந்தவரோடுதான் நிகழ வேண்டும், இந்த மதத்தைச் சார்ந்தவரோடுதான் நிகழ வேண்டும், இந்த அந்தஸ்துக்குரியவரோடுதான் நிகழ வேண்டும் என்றெல்லாம் நீள்கிறது. இவ்வாறு நிகழும் பொழுது பாலின்பம் என்பது வெறுமனே பாலியல் இச்சையாக எஞ்சி விடுகிறது. இந்த இச்சையைத் தூண்டக் கூடிய எல்லாவித ஆபாசங்களையும் நாம் நமது வீடுகளின் வரவேற்பறைகளிலேயே அனுமதித்துள்ளோம். புறச் சூழலால் தூண்டப்பட்ட இந்த இச்சைக்கும், வக்கிரத்துக்கும் மிக எளிதாகப் பலியாகி விடுபவர்கள், குழந்தைகளே.
குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமை என்பது தெற்காசிய நாடுகளின் மிக முக்கியப் பிரச்சினையாக திகழ்கிறது. எங்கெல்லாம் குழந்தைகள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இவ் வன்கொடுமை நிகழ்கிறது. குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமையானது பெரும்பாலானவை நெருங்கிய உறவினர்களால்தான் நிகழ்த்தப்படுகின்றன. குழந்தையின் மாமனால், சித்தப்பாவால், பக்கத்து வீட்டுக்காரரால், ஆசிரியரால், ஏன் குழந்தையின் சொந்தத் தந்தையால் கூட நிகழ்த்தப்படுகிறது.
வேலைக்குச் செல்லும் குழந்தைகளின் மீது பேருந்துப் பயணங்களின் போதும், பணிபுரியும் இடங்களிலும் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்படுகிறது. உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மீது நடத்தப்படும் வன்கொடுமையானது அகமதிப்பீடு எனும் அஸ்திரத்தைக் கொண்டே நிகழ்த்தப்படுகிறது. வீட்டு வேலைக்குச் செல்லும் குழந்தைகள், சுமங்கலித் திட்டம் போன்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் ஆகியோர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் சுரண்டல்கள், குறித்த தகவல்கள் வெளிவருவதே அரிதாயிருக்கிறது.
இந்த சாதி சமூகத்தில் கயர் லாஞ்ச் போன்ற சம்பவங்கள் ஊரே சேர்ந்து ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறை செய்வதும் அதை கொண்டாட்டாமாகக் கொண்டாடுவதும் அதை நீதிமன்றமும் காவல் துறையும் ஒரு வழக்காகவே பதிவு செய்து விட்டு விலகிக் கொள்கிற சமூக அமைப்பில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் இந்நேரத்தில் புரிந்து கொள்ள வேண்டும்!
இவ்வாறாகக் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் சுரண்டலானது, சமூகக் குற்றம் என்பதை விடவும் சமூகத்தின் நடைமுறையாகவே இருந்து வருகிறது. பாலியல் ரீதியாகத் தாம் எவ்வாறு கொடுமைக்குள்ளாக்கப்படுகிறோம், எவ்வாறு சுரண்டப்படுகிறோம் என்பதை உணர்ந்து கொள்ளக் கூட முடியாத பரிதாபகரமான நிலையிலேயே குழந்தைகள் வாழ்கின்றனர். குழந்தைத் தொழிலாளர்களாயினும், பள்ளி மாணவர்களாயினும் விதிக்கப்பட்ட வாழ்க்கையாகவே தங்களது இருத்தலைக் கொள்கின்றனர். பள்ளிகளிலும், குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வயது வந்தோருக்கான பாடல்களைப் போட்டு ஆட வைப்பதும் கூட குழந்தைகளின் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள்தான்.
இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி முறையானது பெரும்பாலும் பிரதிகளோடேயே நின்று விடுகிறது. பிரதிகளாய்க் கற்றதை நடைமுறை வாழ்க்கையோடு பொருத்திப் பார்ப்பதென்பது கற்றலோடு தொடர்பில்லாத ஒன்றாகவே கருதப்படும் நிலைதான் இன்றளவும் நீடிக்கிறது.
வெறும் மனனத் திறன் மட்டுமே முதல் தர (அ) முதல்நிலைக் கல்லூரிகளில் சேர்வதற்குப் போதுமானதாகி விடுகிறது. எடுத்துக்காட்டாகக் கூறுவதாயின் மக்களாட்சி பற்றிப் படிக்கும் பொழுது மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் ஆட்சி என்று வரையறுக்கிறோம். ஆனால் இந்த வரையறையையும் சட்டமன்ற, நாடாளுமன்ற நடைமுறைகளுடனோ, ஏன் மக்களாட்சியின் அடிப்படை அலகான உள்ளாட்சி அமைப்புகள் பற்றிக் கூட தீவிரமாக விவாதித்துக் கற்றுக் கொடுப்பதில்€ல் கற்றுக் கொள்வதுமில்லை.
மண் வகைகளைப் பற்றிய பாடப் பிரிவானது மண்ணோடும், மண்ணின் விளை பொருட்களோடும், உழைப்போடும் சற்றும் தொடர்பில்லாதவரால் கற்பிக்கப்படுகிறது. நடைமுறைக்குத் தொடர்பே இல்லாத வகையில் கற்றுக் கொள்ளப்படுகிறது. இத்தகு காரணங்களால்தான் நூறு கோடிக்கும் மேற்பட்ட மனித வளம் இருந்தும் நூற்றாண்டுகள் கடந்தும் இந்திய அறிவியல் (?) துறையில் குறிப்பிட்டுக் கூறும்படியான கண்டுபிடிப்புகளோ, கண்டு படைப்புகளோ இன்றும் நிகழவில்லை.
அறிவியலும், சமூகவியலும் நடைமுறை வாழ்க்கையோடு சிறிதளவும் தொடர்படுத்தப்படாமல் வெறும் பிரதிகளின் வாசிப்பனுபவத்துடனேயே நின்று விடுகிறது.
ஒரு நாட்டின் ஒட்டு மொத்தக் கல்வி முறையும் வெறும் பிரதிகளுடனேயே நின்று விடும் அதே நேரத்தில் பாலியல் கல்வி பற்றிப் பேசும் பொழுது மட்டும் பிரதிகளைத் தாண்டி உடனடியாக நடைமுறைகளைச் சிந்திக்கிற பொதுப்புத்தி ஏன்?
பாடத் திட்டத்தில் தலைவன், தலைவி காதல் வாழ்க்கை பற்றிய அகத்திணை இருக்கிறது, வீரம் என்னும் பெயரில் ஒரு நாட்டின் மீது படையெடுக்கும் எல்லைதாண்டிய பயங்கர வாதம் பற்றித் தும்பை, வாகை எனத் திணை பிரித்து இலக்கணம் வகுத்து போர்த் தொடுக்கும் புறநானூறு இருக்கிறது. (வப்பாட்டி வைப்பதற்கு இலக்கணம் வகுத்துப் பரத்தமை பேசப்படுகிறது) எத்தனை பேரை ஒருவன் மணந்தான், காதல் களியாட்டங்களை எப்படி நிகழ்த்தினான் எனப் பேசும் சிந்தாமணிகள், உயர்வானவனுக்கு என்ன விகுதி, இழிவானவனை அழைக்க என்ன விகுதி சேர்க்க வேண்டும் என்மனார் புலவர்களின் கூற்றுகளுக்கு இடமிருக்கிறது. மனிதர்களை நால் வர்ணமாய்ப் பாகுபடுத்தும் வேதங்களுக்கும் அதனடிப்படையிலான இலக்கியங்களுக்கும், இடமிருக்கிறது எனும்போது ஏன் பாலியல் கல்விக்கு மட்டும் இடமில்லை.
பாலியல் கல்வி என்று தனியாக ஒன்று தேவையில்லை. நமது பண்பாடும், நீதி நூல்களுமே அதைக் கற்றுக் கொடுக்கும் என்றால் இத்தனை பாலியல் வன்கொடுமைகள் எவ்வாறு நிகழ்கின்றன?
ஒரு குழந்தை தன்னளவில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவாவது பாலியல் கல்வி பற்றி நாம் பேசியே ஆக வேண்டியிருக்கிறது.
கடுமையான சட்டங்களால் மட்டுமே குழந்தைகளின் மீதான வன்கொடுமையைத் தவிர்த்துவிட இயலாது என்பதை குழந்தைகளின் உரிமை பேசுவோர் உணர வேண்டும்!  குற்றங்களுக்கான சமூகக் காரணிகளைக் களைய முற்படுவோம்.

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு!

Jallikattu is an historical identity of bravery of Tamilians - Tamil Literature Ilakkiyam Papers இயற்கை இன்னல்கள் பலவற்றையும் தாங்கிக் கொண்டு ஆண்டு முழுவதும் வயல்களில் உழைக்கும் உழவனின் பெருமையையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் உலகிற்கு பறை சாற்றும் மகத்தான திருநாள் தை பொங்கல் தினம் ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது.
ஒவ்வொரு விவசாயக் குடிமகனும் தங்கள் நிலங்களில் விளைந்த நெல், மஞ்சள், கரும்பு போன்றவற்றுடன் சர்க்கரை பொங்கல் படையல் வைத்து, மாவிலை தோரணம் கட்டி இயற்கையையும், சூரியனையும் வழிபடும் தமிழர் திருநாள் தை பொங்கல். தை பொங்கல் விழா தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், தமிழரின் வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் முரட்டுக் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீர விளையாட்டுகள் தை மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும். ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்முத்திரையில் இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
காளைகளை அடக்கும் திருவிழா ஸ்பெயின், போர்ச்சுக்கல் போன்ற அயல்நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. அது கூர்மையான வாளைக் கொண்டு காளையை காயப்படுத்தி அடக்கும் விளையாட்டுகளாகும். ஆனால் தமிழகத்தில் கொம்புகள் கூர்சீவி விடப்பட்ட முரட்டுக் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு தனித்தன்மை வாய்ந்தது மட்டுமல்ல, தமிழரின் வீரத்திற்கும், வீரத்துடன் ஒன்றிணைந்த பண்பாட்டிற்கும் சான்றாகத் திகழ்கிறது.
4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரீக காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்கள், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் கடந்த 1930-களில் கண்டெடுக்கப்பட்டன. அப்பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அந்த பொருட்களில் கல்லால் ஆன ஒரு முத்திரையும் அடங்கும். அந்த முத்திரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் அந்த முத்திரை செதுக்கப்பட்டு உள்ளது. இந்த முத்திரை 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு. 2000ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் இந்த முத்திரையில் எழுத்துகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த முத்திரை அஸ்கோ பர்போலா என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் வண்ண புகைப்படமாக இடம் பெற்றுள்ளது.
மேலும் தமிழ் எழுத்தாளரும், சிந்து சமவெளி காலத்திய எழுத்துகளில் வல்லுனருமான ஐராவதம் மகாதேவனும் இதுபற்றி ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதை கடந்த 1977ஆம் ஆண்டு இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்டது. இந்த முத்திரை கி.மு. 2000-ம் ஆண்டை சேர்ந்தது. இதை பாதுகாப்பாக வைத்துள்ளனர். சிந்து சமவெளி நாகரீக காலத்தில் நடைமுறையில் இருந்த ஜல்லிக்கட்டை இந்த முத்திரை பிரதிபலிப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதில் உள்ள படத்தை வைத்து இருவிதமான கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. ஒருசாரார் ஒரு காளை ஒன்றுக்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்களை தூக்கி வீசுவதாக கூறுகிறார்கள். 2 வீரர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும், ஒரு வீரர் காளையை பிடிக்க முயல்வது போலவும், மற்றொருவர் பல்டி அடிப்பது போலவும், 5-வது நபர் தரையில் விழுந்து கிடப்பது போலவும் இந்த சித்திரம் அமைந்திருப்பதாக கூறுகிறார்கள்.
தமிழர் இலக்கியத்தில் "கொல்லேறு தழுவல்" என்று பெயர் கூறி காளை அடக்குவது வெகுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆளை கொன்று தூக்கி எறியும் வகையில் வளர்க்கப்பட்ட காளையை, வீரம் சொரிந்த காளையர்கள் அடக்குவதை தழுவல் என்று வீரத்தையே மென்மையான வார்த்தையைக் கொண்டு தமிழ் இலக்கியம் சித்தரிக்கிறது.
இன்றளவும் இப்படிப்பட்ட முறையில்தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொல்லேறு தழுவல் நிகழ்த்தப்படுகிறது. ஜல்லிக்கட்டில் இறக்கப்படும் காளைகளை அதற்கென்றே வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையர்க்களுக்கும், அவர்களை தூக்கியெறிய முற்படும் காளைக்கும் இடையிலான சம வாய்ப்புடைய வீர சோதனைதான்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டில் ஒரு முறை இறங்கிய காளையர் எவரும் அடுத்த ஆண்டும் இறங்கி தங்கள் திறனை தொடர்ந்து நிரூபிக்காமல் இருப்பதில்லை. உடல் பலம் உள்ளவரை ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு, தங்கள் உயிரை பணயமாக வைத்து தமிழரின் வீர மரபை தொடர்ந்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடக்கும் பல ஊர்களில் ஒரு காலத்தில் தீவிரமாக காளை அடக்குவதில் போட்டி போட்டவர்கள், இன்று வயது முதிர்ந்த நிலையிலும் கூட, ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் பட்டிக்குச் சென்று, சீரிக் கொண்டு பாய்ந்துவரும் காளை ஒன்றை தொட்டுவிட்டு வீடு திரும்பும் வழக்கம் இன்றும் உள்ளது.
ஜல்லிக்கட்டு! தமிழர்களின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றட்டும்

பொங்கல் ஸ்பெஷல்: கரும்பின் பயன்பாடுகள் என்னென்ன

பொங்கல் ஸ்பெஷல்: கரும்பின் பயன்பாடுகள் என்னென்ன?

Pongal Special: Sugar cane in Siddha Medicine and its uses - Food Habits and Nutrition Guide in Tamil
'கரும்பு' தாவரவியலுள் இது ஒரு வகையான புல் எனப்படும். தொல்காப்பியமும் இதனைப் 'புல்' எனக் கூறுகிறது.
தொன்றுதொட்டு தமிழ் நாட்டில் வளர்க்கப்படும் கரும்பு, அதியமானின் முன்னோரால் அவர் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது என்று ஒளவையார் கூறுவர். உலகிற்கு சுவையான சர்க்கரை கரும்புச் சாறிலிருந்து பெறப்படுகின்றது. கரும்புக்குப் பிற்காலத்தில் வேழம், கன்னல், கழை எனவும் பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. கரும்புக்கு நீர் மிகுதியாக வேண்டப்படும். அதனால் நீர்ப்பிடிப்பான வயல்களில் பயிரிடப்படுகிறது. இதில் பல கணுக்கள் காணப்படும். கரும்பின் பிறப்பினையும், அதன் மகத்துவத்தையும் கீழே காண்போம்.
சங்க இலக்கியப் பெயராக இவை 'கரும்பு' என்றே அழைக்கப்படுகின்றது. அந்தரத்து பெறுதற்குறிய "அமிர்தம் போன்ற கரும்பை இங்கு தந்தவனுடைய வழித்தோன்றலே" என்று பாடல் தொடங்குவதை சுட்டிக்காட்டி கரும்பு தொன்று தொட்டு தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது. இது முதன் முதலாக தென் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கக்கூடும் என்றும் தாவரவியல் அறிஞர்கள் அறிவியல் அடிப்படையில் கூறியுள்ளனர்.
மெல்லிய வெண்மை நிறமான மணமற்ற இதன் பூக்களை ஆண் குருவி தனது இணையின் எதிர்கால நலனுக்கு, கூடு கட்டும் பொருட்டு எடுத்துச் செல்லும் எனவும் பாடியுள்ளனர் புலவர்கள்.
இனிய சுவைச்சாற்றால் உலகத்திற்கே இனிப்பை வழங்கும் பெருமை கொண்ட இத்தாவரம் இந்தியாவிலும், சீனாவிலும் பயிரிடப்படுகிறது.
கரும்பிலிருந்து சாறு பிழிந்து எஞ்சிய சக்கை, காகிதம் செய்வதற்குப் பயன்படும். இதன் இலைகள் மக்கிப் போய் நல்ல எருவாகவும் விளங்குவதாக இலக்கிய குறிப்புகள் தெரிவிக்கின்றன.
சித்த வைத்தியத்தில் கரும்பின் வேறு பெயர்களாக புனர்பூசம், இக்கு, வேய் என அழைக்கப்படுகிறது. மருத்துவப் பயன்பாட்டுக்கு கரும்புச்சாறு, சர்க்கரை, வேர் பயனாகிறது. இவை இனிப்புச் சுவையுடையது. குளிர்ச்சித் தன்மை கொண்டது.
கரும்புச்சாறு:
இதன் சாற்றை அதிகமாக சாப்பிட்டால் சந்தேக நோயுண்டாகும். மிதமாக சாப்பிட்டால் வெள்ளை, அழற்சி பெருக்கு அடங்கும்.
செங்கரும்பின் சாறு:
இதன் சாறு பித்தத்தைக் குறைக்கிறது.
நல்ல வெல்லம்:
இது பித்தத்தைப் போக்கிடும். வயிற்றுப் புழுக்களையும், நீரிழிவையும் ஏற்படுத்தும்.
பழுப்புச் சர்க்கரை:
கரும்பின் சாற்றைக் காய்ச்சி சர்க்கரை செய்யப்படுகிறது. இது மருந்துகளுக்குத் தேவையாயுள்ளது. வாந்தி, பித்தம், சுவையற்றத் தன்மையைப் போக்குகிறது. கெட்டியான சளியைக் கரைத்து சுகம் தருகிறது.
சீனிச் சர்க்கரை:
இது வாத ஜுரம், வாத நோய், நுண்மையான புழு, விக்கல்களை நீக்குகிறது.
கற்கண்டு:
சர்க்கரையைக் கொண்டு கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் சிறிதளவு எடுத்து சிறிதளவு பொரிகாரம் சேர்த்து 7 தினங்கள் சாப்பிட்டு வந்தால், விந்து நீர்த்தல் நீங்கும். மேலும் பல்லரணை, (ஈறு தடிப்பு) இருமல், வாந்தி ஆகியவை தீரும்.
சாறு:
மிகவும் இனிப்பாக இருக்கும். விக்கலை நிறுத்தும். உடம்பு எரிச்சலைத் தணிக்கும். இதனுடன் தயிரும் சேர்த்துக் குடிக்கலாம்.
சர்க்கரை:
சர்க்கரையைப் பாகு செய்து உணவுப் பொருட்களை நெடுநாள் சேமித்து வைக்கலாம். ஜலதோஷம், நீர்ப்பீனிச நோய்களைப் போக்கவும் தரலாம்.
செம்பு, வெள்ளப் பாஷாணம் முதலிய விஷப்பொருட்களை சாப்பிட்டால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து சர்க்கரை மிகச் சிறப்பான விஷமுறிப்பாக செயல்படுகிறது. ஆறாத புண்களையும் குணமாக்க வழங்கப்படுகிறது.
மஞ்சள் பெழுகும், சர்க்கரையும் சேர்த்து குழம்பாக்கி பருக்களின் மீது தடவி வந்தால் குணமாகிறது. கண்களில் தூசு, வலி, இரணம், நோய் ஆகியவற்றிற்கு சர்க்கரை ஒரு பங்குக்கு மூன்று பங்கு தண்­ர் சேர்த்து கரைத்து ஒரு மணி நேரத்துக்கு 2 சொட்டு கண்களில் விட்டுவந்தால் நோயின் தாக்கம் குறையும்.
மேலும் இவற்றிற்கு, இரவில் கண் இமைகளுக்கு சிற்றாமணக்கு நெய், ஓரங்களில் தேய்த்து, கண் இமை ஒட்டிக் கொள்ளாதபடி செய்வதுடன், காலையில் வெதுவெதுப்பான பாலும், நீரும் சேர்த்து கண்களைக் கழுவி வரவேண்டும்.
நெடுநாள் நோயாளிகளாக உள்ளவர்களின் படுக்கை அறையில் சர்க்கரையைப் போட்டு புகையை ஏற்படுத்தினால் சுத்தமான காற்று ஏற்பட்டு அறை சுத்தமாகும்.
சர்க்கரையானது நாற்றத்தை விலக்குகிறது. அழுகுவதைத் தடுக்கிறது. அதிகளவில் உட்கொண்டால் உடல் மென்மைப்படும். சிவப்புச் சர்க்கரை இலேசான வயிற்றுப் போக்கை உண்டாக்கும். வயிற்றுக்குச் சக்தியை அளிக்கும். வேக்காட்டை உண்டாக்கும். காயங்களில் தூவினால் அவை குளிர்ச்சியடைகின்றன. அழுக்கைப் போக்கும். எளிதில் செரிமானமாகாது.
மருந்து, லேகியங்களில் பூசணம் பூத்து விடமாலிருக்கவும், அதன் சுவை கெடாமல் இருக்கவும், சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளவும் சர்க்கரையை அதிகளவில் பயன்படுத்துவர். லேகியங்கள், முரப்பாக்கள், சர்பத்துக்கள் இவை சர்க்கரைப்பாகு கொண்டுத் தயாரிக்கப்படுகின்றன.
ஊறவைத்த மருந்துகளில் சர்க்கரையைக் கலந்து இன்சுவையுண்டாக்கிப் பருகக் கொடுப்பர். எளிய மலபந்தத்தை நீக்க சிவப்புச் சர்க்கரையைப் பாலில் கலந்து பருக வைப்பர். உணவு செரிமானமாக, உணவு உண்ட பிறகு சிறிதளவு சர்க்கரையை உண்பர். சாக்கரையை உணவில் அதிகம் பயன்படுத்தினால் சோம்பல் ஏற்படும். பருமனானவர்க்கு அதிக இரத்த உற்பத்தியில் உடல் சிவக்கும்.
காடி:
கருப்பஞ்சாற்றைப் புளிக்க வைத்தது காடி என அழைப்பர். இது பசியை உண்டாக்கி ஜீரணத்தை அதிகப்படுத்தும். தாகத்தைக் குறைக்கும். காடி ஒரு பங்கும், சுத்தமான நீர் 5 பங்கும் கலந்து ஈயம் போன்ற விஷங்களால் ஏற்படும் நோய்களுக்குத் தரலாம். இதற்கு முன்பு பேதிக்கு கொடுத்து அதன்பின் கையாள்வது நல்லது.
தலைவலி, மயக்கம், தொண்டைப் புண், மூக்கில் நீர் ஒழுகல், ஆகியவற்றிற்கு இதன் ஆவியை நுகர வைத்தால் குணமேற்படும்.
சிறுநீரில் இரத்தம் வெளியேறும் நோய்க்கு, காடியை தொடை, இடுக்கு ஆகிய இடங்களில் பூசினால் குணமாகும்.
தேள், குளவி, தேனீ போன்றவை கொட்டினாலும், சில பயிர் பொருட்களின் உராய்வலால் ஏற்படும் தினவு, நமைச்சல் நோய்களுக்குப் பூசலாம். இதனைப் போன்றே மார்பக வீக்கத்தையும் கரைக்கலாம்.
ஆண், பெண் இணைப்பால் இரவில் உண்டாகும் மிகு வியர்வைக்கு கருப்பங்காடியை ஒரு பங்கு அளவும், நீர் இரண்டு பங்கு அளவும் கலந்து மார்பில் பூசி வந்தால் வியர்வை குறையும்.
வேர்:
கரும்பின் வேரை முறைப்படி குடிநீரிட்டு கொடுத்து வந்தால் சிறுநீர் எரிச்சல் தணியும்.
கரும்பை சரிபாதியாகப் பிளந்து திப்பிலிப் பொடி, ஏலக்காய்ப் பொடி இவற்றை நடுவாக வைத்து செம்மண் சீலையால் கட்டி கும்பி நெருப்பிலிட்டு பதமாகச் சுட்டு, பின்னர் சீலையை எடுத்து பின் பிழிந்து எடுத்த சாற்றினை விக்கலுக்குக் கொடுத்து வந்தால் தீரும். இதனைப் பல துண்டுகளாக வெட்டி, சுத்திகரிக்கப்பட்ட செம்புத் தூளை சட்டியிலிட்டு வறுத்து வெட்டிய துண்டுகளால் கடைந்தால் ஒருவகை பஸ்பம் உண்டாகும்.
இதனைச் செய்ய ஒரு பலம் செம்புத் தூளுக்கு 4 கரும்புகள் கூட தேவையாகும். இதனைக் கொண்டு பல நோய்களைத் தக்க இணை மருந்துகளால் தீர்க்கலாம்.