Friday, January 14, 2011
வெப்பம்
'மின்னலே', 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'விண்ணைத்தாண்டி வருவாயா' ஆகிய படங்களை இயக்கிய கௌதம் வாசுதேவ் மேனன், சொந்தப் படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். அவர் தயாரிக்கும் ஒரு புதிய படத்துக்கு, 'வெப்பம்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்தில் புதுமுகங்கள் நானி, நித்யா மேனன், கார்த்திக் குமார், பிந்து மாதவி, முத்துக்குமார், ஜெனிபர், பசுபதி, பிரதீப், ரவி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொள்ள, ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்து இருக்கிறார். நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: அஞ்சனா. படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடைபெற்றது. 46 நாட்களில் முழுப் படமும் முடிவடைந்தது. சிறு வயதிலேயே தாயை இழந்த அண்ணன்-தம்பி கதை இது. சிக்கலில் மாட்டிக்கொள்ளும் தம்பியை, அண்ணன் எப்படிப் போராடி மீட்கிறான்? என்பதை கதை சித்தரிக்கிறது. மதன், குமார், ஜெயராமன், வெங்கட் ஆகியோருடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment