Tuesday, September 14, 2010

ஜோக்ஸ்

"க்ளைமாக்ஸ்ல ஹீரோ துணிக்குள்ள கையை விட்டு ஏதோ செய்யறாரே.... என்ன அது?"
"
மர்ம முடிச்சை அவிழ்க்கிறாராம்.....!"

"முன்னாடியெல்லாம் டாக்டர் அவரோட கிளினிக்ல இருப்பாரு.... நான் என் கார்ல போய் பார்த்துட்டு வருவேன்....!"
"
இப்ப என்னாச்சு...?"
"
நான் அவரோட கிளினிக்ல அட்மிட் ஆகிட்டேன்.... அவர் என் கார்ல வந்து பார்த்துட்டுப் போறாரு!"

"டாக்டர், எனக்கு தூக்கத்துல நடக்கற வியாதி இருக்குன்னு எப்படி உறுதியா சொல்றீங்க...?"
"
இல்லேன்னா இப்படி அர்த்த ராத்திரியில வந்து என்னை எழுப்பி, இப்படி இம்சை பண்ணுவியா?"

"தலைவரே முதன்முதலா பார்லிமென்ட்டுக்குள்ள நுழையும் போது என்ன நினைச்சீங்க..?"
"
இவ்வளவு கூட்டத்துல நம்மால நிம்மதியா தூங்க முடியுமான்னு நெனைச்சேன்!"

"தலைவரே, இந்த வருஷம் நீங்க மூணு கட்சி தாவுவீங்களாம்..."
"
ஜோசியர் சொல்றாரா...?"
"
இல்ல...ஜனங்க பேசிக்கறாங்க!"

No comments:

Post a Comment