Tuesday, September 14, 2010

கிரஹப்பிரவேசம்


1. "நர்ஸ் ... கொஞ்ச நேரம் வெளியில போங்க!"
"ஏன் டாக்டர்?"
"இந்த ஆளை இழுத்து மூச்சு விடச் சொன்னா, உங்களைப் பார்த்து பெருமூச்சு விடறார்...!"

2. "நீங்க எடுக்கப் போற புதுப்படத்துக்கு "பிச்சை"ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது..."
"ஏன்...?"
"நீங்க பிச்சையெடுக்கப் போறதா, எல்லாரும் பேசிக்கறாங்க...!"

3. "நம்ம மகாராணியாரை எதிரி மன்னன் கடத்திப் போகவில்லை என்று அடித்துச் சொல்கிறீர்களே... எப்படி மன்னா?"
"எதிரி மன்னன் சந்தோஷமாக இருப்பதாக ஒற்றன் வந்து சொல்கிறானே..!"

4. "அந்த ஆள் பெரிய பந்தா பேர் வழி..."
"அப்படி என்ன செஞ்சார்..?"
"சின்ன வீடு செட்டப் பண்ணதுக்கு கூட கிரஹப்பிரவேசம் பண்ணார்னா பார்த்துக்கோயேன்!"

5. "அந்த ஆஸ்பத்திரியில எல்லா பேஷன்ட்டுகளுக்கும் வாயில துணி கட்டி விட்டிருக்காங்களே...
பன்றிக் காய்ச்சலா?...
"இல்ல... எல்லாரும் நர்ஸ் நமிதாவுக்கு முத்தம் குடுக்க ட்ரை பண்றாங்களாம்..!"


 

No comments:

Post a Comment