1. "டாக்டர் என் மனைவி தூக்கத்துல பேசறா..."
"இதுக்கு போய் நீங்க கவலைப்படறீங்க?"
"பக்கத்துல படுத்திருக்கிற என்னை தலையாட்டச் சொல்றாளே!"
2. "உங்க பையனுக்கு எழுத்தாளர் சுஜாதானு நினைப்பு சார்..."
"ஏன் அப்படிச் சொல்றீங்க?"
"குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்; இதிலிருந்து நீ அறிவது என்ன?னு கேட்டா, "அது மோசமான குரங்கா இருக்கும்!"னு சொல்றான் சார்!"
3. "எதுவா இருந்தாலும் தன்னோட மண்டையை உடைச்சிக்கிட்டு யோசிப்பா என் மனைவி.."
"பரவாயில்லையே... என் மனைவி என்னோட மண்டையை உடைச்சிட்டு, அப்புறமா யோசிக்கறா...!"
4. "வீட்டு மாடில யாருக்கும் தெரியாம ஒரு குவாட்டர் அடிக்கிறத என் மனைவி பாத்துட்டு ...செம பின்னு பின்னிட்டா!"
"ஐயோ... அப்புறம் என்னாச்சு?"
"அதில இருந்து ரெண்டு குவாட்டரா வாங்க வேண்டியதாப் போச்சு!"
5. "நானும் எத்தனையோ மருந்துகளை மாத்திப் பார்த்துட்டேன்.... ஆனா, உங்க வியாதி குணமாகற மாதிரி தெரியலையே!"
"கடைசி முயற்சியா நர்ஸை மாத்திப் பாருங்க டாக்டர்...!"
No comments:
Post a Comment