Wednesday, September 29, 2010

நல்வரவு

நாடகத்தில், ராஜா வேடம் போடுகிற ஒரு நடிகர் வறுமை காரணமாக, சவ ஊர்வலத்தில் நடனம் ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். அந்த சோகத்திலேயே அவர் குடித்துக் குடித்து, மரணத்தைத் தழுவுகிறார். அவருடைய மரணத்துக்குப்பின், வயிற்று பிழைப்புக்காக அவருடைய மனைவி அந்தத் தொழிலை ஏற்றுக்கொண்டு, சவ ஊர்வலத்தில் ஆடுகிறாள். இந்தத் தொழில் கணவரோடும், தன்னோடும் போகட்டும்... தங்களின் ஒரே வாரிசான மகனையாவது பிரபல பாடகர் ஆக்க வேண்டும் என்று எண்ணி, மகனை சங்கீதம் படிக்க வைக்கிறாள், அந்த பெண். அவனும் சங்கீதம் கற்று, சினிமாவில் பாடகனாக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வருகிறான். அவன் சினிமா பாடகர் ஆகிறானா, தாயின் கனவை நிறைவேற்றினானா? இந்த கேள்விக்கு விடை அளிக்கிறது "நல்வரவு" திரைப்படம். ஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி எல்.சுகன்யா வழங்கும் இந்த படத்தில், புது கதாநாயகன் வேணுசந்தர், ரிச்சா பலோட், மதுமிதா, நீபா, விவேக், அம்மு, சம்பத், தலைவாசல் விஜய், அலெக்ஸ், கலைராணி ஆகியோர் நடித்துள்ளனர். இசை: ஆதிஷா, ஒளிப்பதிவு: ஆதி, பாடல்கள்: பிறைசூடன், பா.விஜய், நடனம்: சதீஷ், காதல் கந்தாஸ், எடிட்டர்: கண்ணதாசன், கலை: மோகன், சண்டைப்பயிற்சி: கிரேட் செல்வா. பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்த .பாலசூர்யா, இந்த படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்கியுள்ளார். எல்லாக்கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்த நிலையில் உள்ள இத்திரைப்படம் வெள்ளித்திரையில் நல்வரவாக விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

No comments:

Post a Comment