1. "என்ன மாப்ளே... உங்க கண்ணெதிர்ல ஒருத்தன் கோயில் உண்டியலை உடைச்சு பணத்தை எடுத்தான்னு சொல்றீங்க.... அதைத் தடுக்காம பார்த்துக்கிட்டு இருந்திருக்கீங்களே?"
"அந்தக் கோயில்லதான் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க... அப்போ சாமி தடுக்காம பார்த்துக்கிட்டுதானே இருந்துச்சு!"
2. "கோபமா இருக்கேன்னு உங்க மனைவி சொன்னதுக்கா, வீட்டுக்குப் போக பயப்படறீங்க....?"
"அவ அப்படிச் சொன்னா, அவ கையில ஏதோ ஆயுதம் இருக்குன்னு அர்த்தம்!"
3. "கல்யாண ஆல்பத்துல இந்த போட்டோ மட்டும் ஏன் பிளாக் அண்ட் ஒயிட்ல இருக்கு...?"
"இது மொய் எழுதாம ஏமாத்தினவரோட போட்டோ....!"
4. "லஞ்சம் வாங்கி கட்டின பங்களான்னு நம்ம மேமேனஜர் சிம்பாலிக்கா காட்டிட்டாரா, எப்படி?"
"பங்களாவுக்கு, "சம்திங் ஸ்பெஷல்"ன்னு பெயர் வைச்சிருக்காரே!"
5. "கல்யாணத்துக்கு நூறு ரூபா மொய் எழுதியும் ஒரு நல்ல செருப்பை கூட எடுக்க முடியலடி!"
"ஏன்?"
"எதை எடுக்கப் போனாலும், "நான் பார்த்து வச்சிருக்கேன்... நான் பார்த்து வச்சிருக்கேன்...."ன்னு சொல்றாங்கடி!"
No comments:
Post a Comment