நாகரிகமாக உடை அணிந்திருந்த இளைஞனின் பெட்டியை நீண்ட தூரம் தூக்கி வந்தான் சிறுவன் ஒருவன்.
கருமியான அந்த இளைஞன் கூலியாக ஒரு ரூபாயை அந்தப் பையனுக்குத் தந்தான்.
கடுப்படைந்த சிறுவன் "சார்! உங்களைப் பற்றி எனக்குத் தெரியும்?" என்று கேட்டான் அவன்.
"நீங்கள் திருமணம் ஆகாதவர்" என்றான் சிறுவன்.
"சரி. வேறு என்ன என்னைப் பற்றி உனக்குத் தெரியும்?" என்று கேட்டான் அவன்.
"உங்களைப் போலவே உங்கள் தந்தையும் திருமணம் ஆகாதவர்" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான் அவன்.
No comments:
Post a Comment