Wednesday, September 29, 2010
சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி
"மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி" படத்தைத் தயாரித்த எஸ்.பி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் அடுத்துத் தயாரிக்கும் புதிய படத்துக்கு, "சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி" என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஒரு சனிக்கிழமை சாயங்காலம் 5 மணிக்கு ஆரம்பித்து, மறு சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி வரை நடக்கும் ஒரு வார கால சம்பவங்களை திகில், காதல், நகைச்சுவை கலந்து சொல்லும் கதை இது. கதாநாயகனாக புதுமுகம் ராகுல் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பரத நாட்டியம், குச்சுப்புடி, மோகினி ஆட்டத்தில் தேர்ந்த பெங்களூர் அழகி மாலினி நடிக்கிறார். கோவையைச் சேர்ந்த சரத் என்பவர் அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் மீரா கிருஷ்ணன், இயக்குநர்கள் ரதிபாலா, ரவிபாரதி ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தில் 'எச்.டி.எஸ்.எல்.ஆர்' என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார், எஸ்.பி.எஸ்.குகன். ஜேவி இசையமைத்து இருக்கிறார். பாடல்கள்: தமிழ்செல்வன், நடனம்: தினா, சஞ்சீவ் கண்ணா, எஸ்.ஜானகி சோணைமுத்து, இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இணைதயாரிப்பு: தங்கம் சிவதாஸ், படத்தின் கதை-வசனம் எழுதி, இயக்குநராக அறிமுகமாகிறார் ரவிபாரதி. திரைக்கதையை, இயக்குநர் ரதிபாலா வடிவமைத்து இருக்கிறார். இதன் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், மதுரை மாவட்ட பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment