'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்', 'வெற்றிக்கொடி கட்டு', 'பாண்டவர் பூமி', 'தவமாய் தவமிருந்து', 'ஆட்டோகிராப்', 'பொக்கிஷம்' ஆகிய படங்களை இயக்கிய சேரன் தனது ட்ரீம் தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஒரு புதிய படம் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு, 'முரண்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் கதாநாயகர்களாக சேரன்-பிரசன்னா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். ஹரிப்ரியா, நிகிதா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, முக்கிய வேடத்தில் ஜெயப்பிரகாஷ் நடிக்கிறார். இயக்குநர் மிஷ்கினிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ராஜன் மாதவ் கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இவர், மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரனின் மகன் ஆவார். இன்னொரு மகன் சாஜன் மாதவ், இதே படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். முரண்பாடான 6 கதாபாத்திரங்களை மையமாக வைத்து, அவர்களுக்குள் நடக்கும் சுவையான சம்பவங்களை திரைக்கதை ஆக்கி இருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு நவம்பரில் முடிவடைய இருக்கிறது.
No comments:
Post a Comment