Tuesday, September 28, 2010

இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!

 அந்த மின்னலின் வேகத்தில் இதய சொந்தமானவளே, சொக்கும் விழிப் பார்வையின்றி மனதால் சொக்குப் பொடி போட்டவளே;
 
மிச்சமுள்ள ஆசைகளில்
மொத்தமாய் பூத்தவளே,மூன்று கடல் தாண்டி நின்றும் காதலால் இதயத்தில் அறைந்தவளே
 
காலதவம் பூண்டெழுந்து
பரிசிட்ட பெண்விளக்கே,கவிதை நெருப்பென பொங்கி  இதயத்தை உணர்வுகளால் சுட்டவளே;
 
மூச்சுக்கு முன்னொரு முறையேனும்
  சுவாசத்தில் வசிப்பவளேஎனக்கு இதய வாசல் கதவு திறக்க இணையத்தில் வந்தவளே;
 
நட்புக்கு சக்கரை போட்டு
காதலாய் திரித்தவளே, கெட்டுப் போகாத உன் குணத்தால
மனசெல்லாம் கெடுத்தவளே;
 
குண்டு குண்டு கண்ணாலே
மின்னஞ்சலில் படமனுப்பி மிரட்டியவளே,யாரும் விரட்டாத அன்பெடுத்து கைகோர்க்கத் துடிப்பவளே;
 
கற்கண்டு தேனாட்டம்
கனவு கூட இனிக்குதடி, நீ கூடி வாழும் நாளுக்குத் தான்
வாழ்க்கை சொர்க்கமாய் கனக்குது;
 
மாலை மாத்தும் நாலு இதோ
இப்போ கூட போகுதேடி, இனிமேலும் தயக்கமென்ன ஓடிவந்து கட்டிக்கடி!! உயிரெல்லாம் பூத்துக்கடி!


No comments:

Post a Comment