1. "மன்னா! நீங்கள் போருக்குச் செல்வது போலக் கனவு கண்டீர்களா?"
"ஆமாம்! உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"உங்கள் படுக்கை ஈரமாக இருக்கிறதே!"
2. "சுற்றுச்சூழல் சரியில்லைன்னு தலைவர் சொல்றாரே... ஏன்?"
"அவர் குடியிருக்கற வீட்டைச் சுத்தி நல்லதா ஒரு ஃபிகர்கூட குடி இல்லையாம்..!"
3. "இந்த ஸ்பெஷல் வார்டுல அப்படி என்ன இருக்கு..?"
"பேஷன்ட்டுக்கு போர் அடிச்சா, நர்சுங்க அவரோட உக்கார்ந்து சீட்டு விளையாடுவாங்க..!"
4. "சிக்கன் சாப்பிடறா மாதிரி அடிக்கடி கனவு வருதுய்யா...."
"வீட்ல சாப்பிடற மாதிரியா.... இல்ல, ஜெயில்ல வச்சு சாப்பிடற மாதிரியா தலைவரே..?"
5. "டீக்கடையில பஜ்ஜி சாப்பிட்டதும், "பொண்ணை வரச் சொல்லுங்க..." ன்னு சொல்றீங்களே..."
"அடிக்கடி பெண் பார்க்கப் போகிற பழக்க தோஷத்துல சொல்லிட்டேன்..."
No comments:
Post a Comment