முன்னவர்
நேர்மையான நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஒழுக்கம் பெரிய அளவில் உதவுகிறது. அப்படி ஒழுக்கமான வாழ்க்கை இல்லையென்றால், எதிர்காலம் தடம் மாறிப்போய்விடும் என்பதை கருவாக வைத்து ஒரு படம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு, 'முன்னவர்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஒழுக்கத்தை போதிக்கும் ஆசிரியரும், அதை உணரும் மாணவர்களும் தங்கள் கடமையை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். அப்படி நடக்கத் தவறினால், என்ன விளைவுகள் ஏற்படும்? என்பதை கதை சித்தரிக்கிறது. புதுமுகம் சரவணன்.சி கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த ரஞ்சுஷா நடிக்கிறார். இன்னொரு கதாநாயகனாக கணேஷ் நடிக்க, இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கிறார். இவர்களுடன் புதுமுகங்கள் ஜெயக்குமார், மதி, தமிழ்மகன், தனலெட்சுமி ஆகியோரும் நடிக்கிறார்கள். நந்தாஜி இசையமைக்க, தமிழ்மகன், மகாலட்சுமி ஆகிய இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். மகிபாலன் ஒளிப்பதிவு செய்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குநராக அறிமுகம் ஆகிறார், ஆர்.கே.வேல்ராஜ். இவர், இயக்குநர்கள் கே.ரங்கராஜ், 'தினந்தோறும்' நாகராஜ், எத்திராஜ், இளஞ்செழியன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். ஜி பிலிம்ஸ் சார்பில் ஆர்.சந்திரன் தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னை அருகில் உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் கோவிலில் தொடங்கி, தொடர்ந்து ஜெகநாதபுரம், செங்குன்றம் பகுதிகளில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தேனி, கம்பம் மற்றும் மதுரை சுற்றுவட்டாரங்களில் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment