இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் போட்டுக் கொடுத்துள்ள காமன்வெல்த் விளையாட்டு மைய நோக்குப் பாடல் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், பாடலைத் திருத்தும் எண்ணத்தில் ரஹ்மான் இல்லையாம். ஓ யாரோ ஏ இந்தியா புலாலியே என்று தொடங்கும் காமன்வெல்த் மைய நோக்குப் பாடலை ரஹ்மான் அமைத்துக் கொடுத்துள்ளார். இதற்காக அவருக்குப் போட்டி ஒருங்கிணைப்புக் குழு ரூ. 5 கோடி கட்டணம் கொடுத்துள்ளது. ஆனால் இந்தப் பாடல் யாரையும் கவரவில்லை. பெரும்பாலானோர் அதிருப்தி வெளியிட்டுள்ளனராம். இதனால் காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழு கவலை அடைந்துள்ளது. நான்கு நிமிடம் வரும் இந்தப் பாடலும், இசையும் சிறப்பாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனராம். இருப்பினும் அதில் திருத்தம் செய்யும் திட்டம் ரஹ்மானிடம் இல்லையாம். மாறாக அவர் தனது ஜெய் ஹோ சுற்றுப்பயணத்தைத் தொடருவதற்காக அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார். இதையடுத்து பிரபலங்களை வைத்து இந்தப் பாடலை பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளனராம். இதற்காக ஷாருக்கானை அணுகியுள்ளனர். அவர் மூலம் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தி பாடலை பிரபலப்படுத்தப் போகிறார்களாம். யானைக்கும் அடி சறுக்கும்!
No comments:
Post a Comment