சுதந்திர தின வாழ்த்துகள்!
கையூட்டிற்காக காத்திருக்கும் கையொப்பங்கள்... இரவோ பகலோ திருடுபோய்விடும் அச்சத்தில் விழித்திருக்கும் இமைகள்... காலதாமதத்தில் கற்பழிப்பு கொடூரங்களை அசைபோடும் பெண்ணின் பெற்றோர் மனது... தாருக்கு ஏங்கி ஏங்கி உருகி உடைந்த சாலைகள்... மின்சாரத்திற்கு காத்துக்கிடக்கும் மின்விசிறிகளும் மாரடைப்புக்காரர்களும்... இரும்பை விட கடினமான உலோகங்களை எதிர்பார்க்கும் பீரோக்கள்... தீபாவளிதோறும் இடைத்தேர்தலை எதிர்பார்க்கும் மனங்கள்... குண்டு துளைத்துவிடும் பயத்தில் கண்ணாடிக் கூண்டிற்குள் ஜனாதிபதி... இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
No comments:
Post a Comment