1. "தலைவர் ஏன் கோபமா இருக்காரு..?"
"அவருக்கு கொடுத்த குற்றப்பத்திரிகைகூட தீபாவளி மலரா வந்துடுச்சாம்..!"
2. "அட... வுடுங்க மாமா! பனியன் எல்லாம் நீங்க போட்டு விடறீங்களே..?"
"சும்மா இருங்க மாப்ளே... தலை தீபாவளிக்கு ஒண்ணுமே போடலைன்னு யாரும் பேசிடக் கூடாதுல்லே?"
3. "மாப்பிள்ளை அஜித் ரசிகராம்..."
"ஓ... அதான் "தல" தீபாவளிக்கு "அசல்" வெடிகளை வாங்கி வைக்கச் சொல்லி லெட்டர் போட்டிருக்காரா?"
4. "ஆனாலும் அந்த ஸ்டேஷன் போலீஸ்காரங்க ரொம்ப மோசம்..."
"ஏன் அப்படிச் சொல்றே?"
"திருடப் போவது யாருன்னு நிகழ்ச்சி நடத்தி, சிறப்பான திருடனைத் தேர்ந்தெடுத்து திருட அனுப்பறாங்களாம்!"
5. "இது நூறாவது ஆபரேஷன்னு சொல்றீங்க... அப்புறம் ஏன் டாக்டர் கை நடுங்குது.?"
"எங்கே இதுவும் ஃபெயிலியர் ஆகிடுமோன்னுதான்..!"
No comments:
Post a Comment