காந்தகார் விமான கடத்தல் சம்பவத்தை படமாகத் தயாரிக்கிறார் பிரகாஷ்ராஜ். டூயட் மூவிஸ் சார்பில் பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் படம் 'பயணம்'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை ராதா மோகன் இயக்குகிறார். நாகார்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சனாகான், பூனம் கவுர் நடிக்கின்றனர். இதில் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரியாக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். காந்தகார் விமான கடத்தல் சம்பவம்தான் இப்படத்துக்கு வழிகாட்டிதான். ஆனால் அதுவே கதை கிடையாது. இதில் கதைப்படி சென்னையிலிருந்து விமானம் புறப்படுகிறது. புறப்பட்டு, சிறிது நிமிடங்களில் அதை வில்லன்கள் கடத்துகின்றனர். திருப்பதி விமான நிலையத்தில் தரையிறக்கி, அரசை மிரட்டுகின்றனர். வெறும் த்ரில்லராக மட்டும் இப்படம் இருக்காது. விமானத்தில் பாதிக்கப்படும் பயணிகள் சம்மந்தப்பட்ட காட்சிகள், மனதைத் தொடும் வகையில் இருக்கும். அதில் ராதாமோகனின் டச் இருக்கும் என்கிறார் பிரகாஷ்ராஜ். பி.சி.ஸ்ரீராமின் மாணவர் கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார். இசை: தேவிஸ்ரீ பிரசாத். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தில் முக்கிய இடம்பெறும் விமான நிலையம் ஹைதராபாத் ராமோஜி ஸ்டூடியோவில் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. திருப்பதி விமான நிலைய மாடலில் இந்த விமான நிலையத்தை அமைத்திருந்தார் கலை இயக்குநர் கதிர். படத்தில் இடம்பெறும் விமானமும் செட் போட்டுதான் எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment