Wednesday, September 29, 2010
சிவப்பு சாமி
சத்யராஜ் நடித்து ஆந்திராவில் வெற்றிபெற்ற தெலுங்கு படம், "சங்கம்". இந்தப் படம், "சிவப்பு சாமி" என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இதில் சத்யராஜுடன் த்ரிஷா, கோபிசந்த், கோட்டா சீனிவாசராவ், 'தூள்' சகுந்தலா ஆகியோரும் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பவர், சிவா. ஏ.ஆர்.கே.ராஜராஜா வசனம் எழுதியிருக்கிறார். தமன், இசையமைத்துள்ளார். ஸ்ரீநாக் எண்டர்பிரைசஸ் சார்பில் நாகராஜ் தயாரித்து வருகிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஷோபி நடனம் அமைத்து இருக்கிறார். கதைப்படி சத்யராஜ், தனது ஒரே மகன் மீது உயிரை வைத்து இருக்கிறார். வெளிநாட்டில் படித்துவிட்டு திரும்புகிற அவருடைய மகனை, பரம்பரை பகையாளி பழிவாங்குகிறான். அந்தக் கொடுமையை கண்டு சத்யராஜ், "சிவப்பு சாமி"யாக அவதாரம் எடுப்பதே கதை. இந்தப் படத்தின் பெரும்பகுதி, ஆஸ்திரேலியாவில் வளர்ந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment