1. "ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சாமியார் வந்திருக்காரே, எதுக்கு?"
"நடிகையோட கால்ஷீட்டை அவர்தான் கவனிச்சுக்கிறாராம்!"
2. "ஏண்டி, உன் குழந்தைக்கு உன் வீட்டுக்காரரு சொன்ன பேர வேண்டாம்னுட்ட... அவங்க அம்மா பேர சொன்னாரா?"
"இல்லடி... என் தங்கச்சி பேர சொல்றார்டி!"
3. "அந்த எதிரி நாட்டு மன்னன், எங்க மன்னருக்கு ரத்த சொந்தம்"
"நெருங்கின உறவா?"
"இல்லை... அடிக்கடி போர் செஞ்சு, எங்க மன்னரை ரத்தக் களறி ஆக்கிடுவாரு!"
4. "டாக்டர் என்னை வெயிட்டே தூக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாரு..."
"சரி... அதுக்குப் போய் உன் கணவர் ஏன் சந்தோஷமா திரியுறாரு?"
"இனிமே சண்டையில அவருக்கு அடி பலமா விழாதே...!"
5. "தலைவர் ஏன் திடீர்னு பொதுக்குழுவைக் கூட்டச்சொல்லி இருக்காரு....?"
"கட்சி ஆபீஸ் வாசல்ல விட்டிருந்த அவரோட புதுச் செருப்பைக் காணோமாம்.... அதை எடுத்தது யார்னு தெரியணுமாம்!"
No comments:
Post a Comment