1. "நமது மன்னர் ஞாபக சக்தியில யானை மாதிரியாமே..?"
"ஆமா... ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த போரில் எதிரி மன்னன் எத்தனை முறை எட்டி உதைத்தான் என்பதைக்கூட ஞாபகம் வைத்திருப்பார்!"
2. "தலைவர் வீட்ல வருமானவரி அதிகாரிங்க எதுக்கு சோதனை போட்டாங்க...?"
"வருமானத்துக்கு மேல் சின்ன வீடு வச்சிருந்தாராம்..!"
3. "தூங்கறவங்களை எழுப்பி விடறதுக்காக உங்க ஆபீஸ்ல சம்பளம் கொடுத்து ஒரு ஆளை வச்சிருக்காங்களா... யார் அது?"
"மானேஜர்னு பேரு!"
4. "என்ன கபாலி... புதுசா ஸ்கூல் ஆரம்பிச்சிருக்கியாமே?"
"முன்ன மாதிரி ஓடியாடி தொழில் பண்ண முடியலை எஜமான்!"
5. "உன் மனைவி மெகா சீரியலுக்கு அடிமை ஆகிட்டாள்னு எப்படிச் சொல்றே...?"
"ஒண்ணு அழுதுகிட்டே பேசறா... இல்லைன்னா ஆவேசமா பேசறாளே..!"
No comments:
Post a Comment