Tuesday, September 14, 2010

வாழ்க்கை ஒரு சக்கரம்

1. "உன் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாததால் உன்னை விடுதலை செய்கிறேன்..."
"என்னோட இந்த வெற்றியை எதிர்க்கட்சி வக்கீலுக்கும், என் கேஸை விசாரிச்ச போலீசுக்கும் சமர்ப்பிக்கிறேன் எசமான்!"

2. "எந்த டெஸ்ட்டும் எடுக்காம எப்படி டாக்டர் எனக்கு சுகர், பிளட் பிரஷர் எல்லாமே நார்மலா இருக்குன்னு சொல்றீங்க..?"
"உங்க பாக்கெட் வீக்கா இருக்கறதை வச்சுத்தான்!"

3. "வாழ்க்கை ஒரு வட்டம்..."
"எப்படி?"
"ஒரு காலத்துல மனுஷனைப் பார்த்து பன்றி பயந்துச்சு. இப்போ பன்றியைப் பார்த்து மனுஷன் பயப்படறானே?!"

4. "மரியாதையா பீரோ சாவியை எங்கே வச்சிருக்கேன்னு சொல்லிடு..."
"அதைத்தான் நானும் ரொம்ப நாளா தேடிக்கிட்டிருக்கேன். வா, ரெண்டு பேரும் சேர்ந்து தேடுவோம்!"


 

No comments:

Post a Comment