ஒரு கார்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞனுக்கும், இளம் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை கருவாக வைத்து, ஒரு படம் தயாராகிறது. இந்த படத்துக்கு, "யுவன் யுவதி" என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இளமை ததும்பும் இந்த படத்தில், பரத் ஒரு துள்ளலான வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த ரீமா கல்லிங்கல் அறிமுகம் ஆகிறார். இவர், ஏற்கனவே 3 மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். சந்தானம், சம்பத் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன் கதை-வசனம் எழுத, ஜி.என்.ஆர்.குமரவேலன் திரைக்கதை அமைத்து இயக்குகிறார். டாக்டர் வி.ராமதாஸ் வழங்க, ராம் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பைஜா என்பவர் தயாரிக்கிறார். படப்பிடிப்பு கடந்த 14-ந் தேதி சென்னையில் தொடங்கி, பழனி, பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் நடைபெறுகிறது. கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு உள்ள வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்யும் படம் இது
No comments:
Post a Comment