படம் தயாரிப்பது சவாலானது என்பதை தெரிந்துகொண்டேன் என்றார் பூமிகா. தெலுங்கில் 'தகிட தகிட' என்ற படத்தை கணவர் பரத் தாகூருடன் இணைந்து தயாரித்துள்ளார் பூமிகா. இதுபற்றி அவர் கூறியது: சினிமாவில் நடிகையாக இருந்துவிட்டேன். அதன் அடுத்த கட்டமாக, படத் தயாரிப்பில் இறங்கினேன். படம் தயாரிப்பது சவாலான வேலை என்பதைத் தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் படபடப்பாகவே இருந்தேன். இருந்தாலும் தயாரிப்பு அனுபவத்தை ஓரளவு கற்றுக்கொண்டதாகவே உணர்கிறேன். தொடர்ந்து படம் தயாரிப்பது குறித்து முடிவு செய்யவில்லை. இந்த படத்தில் சின்ன வேடத்தில் நடித்தும் இருக்கிறேன். தொடர்ந்து ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறேன். இது தவிர இந்தி கவிதை புத்தகம் வெளியிடும் முடிவில் இருக்கிறேன். இந்த வருட இறுதிக்குள் புத்தகம் வெளியாகிவிடும், என்றார். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா?
No comments:
Post a Comment