Tuesday, September 14, 2010

கைராசியானவர்


1. "எங்க ஆபீஸ்ல கூட்டி பெருக்க ஒரு ஆள் வேணும்..."
"முன் அனுபவம் இருக்கணுமா?"
"ஏதாவது ஒரு கம்பெனில அஞ்சு வருஷம் குப்பை கொட்டிருந்தா போதும்!"

2. "உங்க மனுவை ஏன் மகளிர் அணி தலைவி இடுப்புல சொருகிட்டு போறாங்க?"
"தலைவரோட பார்வைக்கு செல்ல வேண்டாமா?"

3. இந்த ஆபரேஷனுக்கு அப்புறம் உங்க மனைவிக்கு பேச்சே வராது...!"
"நீங்க இவ்வளவு கைராசியானவர்னு முன்னாலயே தெரியாமப் போச்சே டாக்டர்...!"

4. "கோட்டையில நாலாபுறமும் மகாராணி கட்அவுட்டை மன்னர் நிறுத்தி வச்சிருக்காரே... ஏன்?"
"படையெடுத்து வர்ற எதிரி மன்னனுக்கு பயம் காட்டத்தான்!"

5. "எதுக்கு பக்கத்து வீட்டுக்காரியோட புடவையை வாங்கி கட்டிக்கிட்டு இருக்கே...?"
"அப்படியாவது நீங்க என்னைப் பார்த்து பல்லைக்காட்டறீங்களான்னு பார்க்கலாம்னு தான்...!"


 

No comments:

Post a Comment