ஸ்ரீ பண்ணாரியம்மன் டீம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.பரமேஸ்வரர், வடிவேல் ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் படம் 'விரைவுப் பேருந்து'. இதில் நாயகனாக யுவன் நடிக்க, நாயகியாக அபிநிதா நடிக்கிறார். முரளிராஜ் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். தொலைக்காட்சித் தொடர்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த செந்தில் சுவாமிநாதன் இப்படத்தின் மூலம் கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் கதைக்களம் முழுவதும் ஒரு பேருந்துதானாம். தொடக்கத்தில் இருந்து முடிவு வரை பேருந்துக்குள்தான் கதை நடக்கிறதாம். சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு புறப்படும் ஒரு விரைவுப் பேருந்தில் அவசரமாக ஓடிவந்து ஏறும் கதாநாயகிக்கு உள்ள பிரச்சினை என்ன? கதாநாயகியின் பிரச்சினைகளுக்கு கதாநாயகன் எவ்வாறு உதவி செய்கிறான் என்பதைத்தான் திரைக்கதை அமைத்து படமாக உருவாக்கியிருக்கிறாராம் இயக்குநர்: செந்தில் சுவாமிநாதன், தயாரிப்பு: எஸ்.பரமேஸ்வரர், வடிவேல், ஒளிப்பதிவு: ஜி.கே.ரவிக்குமார், கலை: சாய்மணி, படத்தொகுப்பு: பாரிவள்ளல், இசை: ஜீன் ஹுயுரேட். சிதம்பரத்தில் இருந்து சென்னை வரையிலான பயண நேரத்தில்தான் கதை சொல்லப்படுவதால், பவானி, நெடுங்குளம், குமாரபாளையம், பூலாம்பட்டி, சென்னை மற்றும் காஞ்சீபுரம் ஆகியப் பகுதிகளிலும் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். விரைவில் திரைக்கு வர இருக்கிறது 'விரைவுப் பேருந்து'.
No comments:
Post a Comment