Tuesday, September 28, 2010

இந்தியக் குடிமகன்கள்

இந்தியக் குடிமகன்கள்
மழை நாளில் காகிதக் கப்பல் விட்ட
மழலையர் வளர்ந்து
அமெரிக்காவிலிருந்து
இந்தியாவிலிருக்கும்
தாய் - தந்தைக்கு
பணம் அனுப்ப
செக் கிழிக்கும்
செம்மல்களாயினர்..
 
காந்தி சிலையைச் சுற்றி

புல்வெளி அமைத்துப்
பராமரிக்கிறது
அந்நிய மூலதன வங்கி
 
காந்தி மார்க்கெட் காமராஜ் நகர்
பாரதி அவென்யூ
..சி. பூங்கா ஜீவானந்தம் தெரு
பெரியார் சாலை
திலகர் காலனி
எங்கும் காணக் கிடைப்பார்கள்
சுயநினைவற்றுக் கிடக்கும்
இந்தியக் குடிமகன்கள்

No comments:

Post a Comment