'நாடோடிகள்', 'கோரிப்பாளையம்' ஆகிய படங்களை தொடர்ந்து, 'சிந்து சமவெளி' என்ற படத்தை தயாரித்து வருகிறார், எஸ்.மைக்கேல் ராயப்பன். இந்த படத்தை அடுத்து அவர் தயாரிக்கும் 4-வது படம், 'ஆடுபுலி'. 'மிருகம்', 'ஈரம்' ஆகிய படங்களில் நடித்த ஆதி, கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பூர்ணா நடிக்கிறார். மூன்று தலைமுறைகளை சார்ந்த கதை இது. ரவிச்சந்திரன்-கே.ஆர்.விஜயா, பிரபு-அனுபமா, சுரேஷ்-யுவராணி, ஆதி-பூர்ணா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நிழல்கள் ரவி, மயில்சாமி, ஸ்ரீநாத், சூரி, சிங்கமுத்து ஆகியோரும் நடிக்கிறார்கள். ராஜவேல் ஒளிவீரன் ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர் சி.பாபு இசையமைக்க, வாலி, விவேகா, யுகபாரதி மற்றும் கலைக்குமார் ஆகியோர் இப்படத்திற்கு பாடல்கள் எழுதுகின்றனர். கதை-திரைக்கதை-வசனம் எழுதி, இயக்குகிறார் விஜய்பிரகாஷ். இவர், கே.பாக்யராஜ், பூரி ஜெகன்னாத், ஒய்.பி.சவுத்ரி ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர். குளோபல் இன்போடெய்ன்மெண்ட்ஸ் சார்பில் படம் தயாராகிறது. இந்த படத்துக்காக, சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு அப்பால் இருக்கும் இரும்புத்தாது கலந்த மண் பகுதியில், ஆங்கிலப் படங்களுக்கு நிகரான ஒரு கார் துரத்தல் காட்சி 5 நாட்கள் படமாக்கப்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.
No comments:
Post a Comment