1. "ஏன் டாக்டர் என்னை அந்த பெட்லயிருந்து இந்த பெட்டுக்கு மாத்தி ஆபரேஷன் பண்ணப் போறீங்க...?"
"நீங்கதானே ஆபரேஷனை "தள்ளி வைக்கச்" சொன்னீங்க...!"
ராம்.ஆதிநாராயணன்
2. "என்ன போர்க்களத்திலிருந்து தப்பிக்க மன்னர் ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டாரா?"
"ஆம். "போர் - வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு" என்று எழுதி வைத்து விட்டார்!"
சி.பி.செந்தில்குமார்
3. "திருட வந்தவன் எந்த பயங்கர ஆயுதத்தைக் காட்டி உங்களை மிரட்டினான்?"
"காலாவதியான மருந்து, மாத்திரைகளை!"
எம்.எம்.தேவதாசன்
4. "டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது..."
"டாக்டரோட செலவை நீங்க ஏன் பண்றீங்க?"
கூடல்
5. "மனைவியை அடிக்கும் ஆண்களுக்கெல்லாம் என்ன தண்டனை தரலாம் மன்னா..?"
"தண்டனையாவது... உடனே அந்த வீரர்களை நம் படையில் சேர்த்துவிடுங்கள்!"
சரவணன்
No comments:
Post a Comment