மதுராவில் தேவகி-வசு தேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தவர்
கிருஷ்ணர்.அவர் பிறந்த இடம் ஒரு சிறைச்சாலை.தற்போது அந்த
இடத்திற்கு மேல் “கத்ர கேஷப் தேவ்” என்ற கிருஷ்ணர் கோவில்
எழுப்பப்பட்டுள்ளது.மதுராவில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம் பயணித்தால்
யசோதையால் கண்ணன் வளர்க்கப்பட்ட கோகுலத்தை சென்றடையலாம்.
இப்படி மதுராவில் பிறந்து, கோகுலத்தில் வளர்த கண்ணன், கம்சனைக்
கொன்று துவாரகையில் அரசாட்சி செய்தார்.
No comments:
Post a Comment