நிருபர்: நீங்க சமீபத்திலே நடிச்சு வெளிவந்த பயங்கரப் படத்தைப் பார்த்தேனுங்க.நடிகை: அது பயங்கரப் படம் இல்லேங்க. நான் மேக்கப் இல்லாம நடிச்ச முதல் படம்
டாக்டர்: வாயை நன்றாகத் திறங்க.நோயாளி: ஆ!டாக்டர்: இன்னும் பெரிசா!நோயாளி: ஆ! ஆ!டாக்டர்: இன்னும் அகலமா...நோயாளி: நீங்க உள்ளே போய்த்தான் வைத்தியம் செய்ய முடியும்னா எனக்கு அது வேணாம், டாக்டர்.
என்ன உங்க மாப்பிள்ளை வெளியிலே வராம ஜன்னல் வழியாகவே பார்க்கிறாரு?
தீபாவளிக்கு அவருக்குச் சட்டை எடுத்தேன். பேண்ட் எடுக்க மறந்துட்டேன். அதனால்தான்.
மானேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட்?டைப்பிஸ்ட் : என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான்.மானேஜர்: அப்படி என்றால் வேகமாக நடந்து சீக்கிரமாக வந்திருக்க வேண்டியது தானே?டைப்பிஸ்ட்: அவன் மெதுவாத்தானே வந்தான்!
இளவரசி: மணந்தால் உங்களைத்தான் மணப்போன். இல்லையேல் மரணந்தான் என்று அந்த இளவசரிடம் சொல்லச் சொன்னேனே! சொன்னாயா?தோழி: நீங்கள் சொன்னபடியே அவரிடம் சொன்னேன். அவர் என்னையே மணப்பதாகச் சத்தியம் செய்து கொடுத்துவிட்டார், இளவரசி!
No comments:
Post a Comment