1. "நம்ம தலைவர் பத்தாவது ரவுண்டுல எதிர்கட்சித் தலைவரை ஜெயிச்சுட்டாரு..."
"எலெக்ஷன்லயா..?"
"இல்ல... டாஸ்மாக் "பார்"ல...!"
2. "உன்னைக் கட்டினதுக்கு உன் தங்கையே "பேசாமல்" கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி."
"பேசாமல்" இருப்பதற்கு யாரைக் கல்யாணம் பண்ணினால்தான் என்ன?"
3. "அவர் போலீஸ் வேலைக்கு சேர்ந்தப்ப "சிக்ஸ் பேக்ஸ்" வச்சிருந்தாரு... இப்ப "சிங்கிள் பேக்" தான் வச்சிருக்காரு..."
"என்ன சொல்றே?"
"தொப்"பை" வச்சிருக்காருன்னு சொன்னேன்..."
4. "போதையில இருந்த தலைவர்கிட்ட, மணமக்களை வாழ்த்தச் சொல்லியிருக்கக் கூடாது..."
"ஏன். . . என்ன செய்தார்?"
"சாராயமும் சைட் டிஷ் ஊறுகாயுமா சேர்ந்து வாழுங்கன்னு வாழ்த்திட்டாரு..!"
No comments:
Post a Comment