Friday, October 1, 2010

த்ரிஷாவுக்கு முத்தம் தர மாட்டேன்

கூலி கொடுத்தும் கரும்பு தின்ன மறுத்தவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? த்ரிஷா சம்மதம் தெரிவித்தும் அவரை முத்தமிட மறுத்த நடிகரைப் பற்றி வேறெப்படி சொல்வது? இந்தியில் வெளியான லவ் ஆஜ் கல் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள். சைஃப் அலிகான் நடித்த வேடத்தில் பவன் கல்யாண், தீபிகா படுகோன் வேடத்தில் த்ரிஷா. லவ் ஆஜ் கல்லில் வருவதைப் போன்ற லிப் டு லிப் முத்தக் காட்சியை தெலுங்கிலும் வைக்க ஆசைப்பட்டிருக்கிறார் இயக்குநர். பவன் கல்யாணுக்கு முத்தம் தர த்ரிஷா தயார். ஆனால் பவன் கல்யாண் தனது வயசுக்கும், கௌரவத்துக்கும் சரிவராது என்று த்ரிஷாவை முத்தமிட மறுத்திருக்கிறார். அப்படிப் போடு! இப்படி ஆளுங்களும் சினிமால இருக்கீங்களா?

No comments:

Post a Comment