தெலுங்கில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து வருகிறார் ப்ரியாமணி. நீச்சல் உடை, முத்தக் காட்சிகள் என அனைத்துக்கும் ஓகே சொல்லுவதால் ப்ரியாமணியின் தெலுங்கு கால்ஷீட் நிரம்பி வழிகிறது. விஜி சிபிவிஸ்தா இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்தில் சுமந்த் ஜோடியாக நடித்து வருகிறார். இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு இந்தப் படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளாராம் ப்ரியா. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை தயாரான படக் காட்சிகளை படக் குழு பார்த்திருக்கிறது. சுமந்த், ப்ரியாமணியின் கெமிஸ்ட்ரி கதைக்கு பொருத்தமாக இருப்பதாக படக் குழுவினர் சொல்ல, இயக்குநர் விஜிக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது. சுமந்த் - ப்ரியாமணி ஜோடியை முத்தக் காட்சியில் நடிக்க வைத்து விடலாம் என்பதுதான் அது. தயங்கிக் கொண்டே ப்ரியாமணியிடம் இயக்குநர் கேட்க, ஓகே சொல்லியிருக்கிறார் ப்ரியா. சுமந்துடன் ப்ரியாமணி பங்கேற்கும் முத்தக் காட்சி சமீபத்தில்தான் படமாக்கப்பட்டது. அம்மணிதான் ரொம்ப ஃப்ரீயானவங்களாச்சே.... இதுக்கென்ன தயக்கம் வேண்டிக்கெடக்கு........
No comments:
Post a Comment