Thursday, October 14, 2010

கவுதம் மேனன் தயாரிப்பில் அதர்வா

நடிகர் முரளியின் மகன் அதர்வா இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் படத்தின் நாயகனாக நடிக்கவுள்ளார். பாணா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் அதர்வா. தனக்கு முதல் படமாக வெளியான பாணா காத்தாடி, தனது தந்தைக்கு கடைசி படமாக அமைந்து விட்டதை நினைத்து வருத்தப்பட்ட அதர்வா புதிய படமொன்றில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். பாணா காத்தாடியில் அதர்வாவின் நடிப்பைப் பார்த்த இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், தனது தயாரிப்பு நிறுவனமான போட்டான் கதாஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்திற்கு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். அந்தப் புதிய படத்திற்கு இயக்குநர் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனத் தெரிகிறது. டைட்டில சீக்கிரமா சொல்லுங்க சார்!... வெயிட் பண்ணி பண்ணி அலுத்துப்போச்சு....

No comments:

Post a Comment