Thursday, October 14, 2010

காளஹஸ்தி கோயிலில் நயன்-பிரபுதேவா!

தங்கள் திருமணத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் சட்டப் பிரச்சினைகள் தீர பிரபுதேவாவும், நயன்தாராவும் காளஹஸ்தி கோயிலில் நேற்று சிறப்புப் பூஜை நடத்தினர். இந்தப் பூஜைக்கு இருவரும் தனித்தனியாக வந்தனர். கோயிலுக்கு வந்தபிறகு ஜோடியாக சேர்ந்து பூஜை செய்தனர். தடைகள் நீங்க, நினைத்தது கை கூட காளஹஸ்தி கோயிலில் சிறப்புப் பூஜை செய்வது வழக்கம். இந்தப் பூஜையை, கள்ளக்காதல் சிக்கலில் சிக்கித் தவிக்கும் பிரபுதேவா-நயன்தாராவும் நேற்று செய்தனர். ஹைதராபாத்தில் தங்கியிருக்கும் இருவரும் காளஹஸ்திக்கு தனித்தனியாகவே வந்தனர். இருவரும் சேர்ந்து சுற்றக் கூடாது என ரம்லத் வழக்குத் தொடர்ந்திருப்பதால் இப்படி எச்சரிக்கையுடன் வந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. பின்னர் கோயிலில் இருவர் பெயரிலும் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. இருவரும் நீண்ட நேரம் கோயிலில் இருந்து சாமி கும்பிட்டனர். பின்னர் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர். சாமிங்களுக்கே ரெண்டு தாரந்தான்னு தெரிஞ்சுக்கிட்டுதான் இப்படியெல்லாம் செய்றாரோ.....

No comments:

Post a Comment