Thursday, October 14, 2010
ஓட்டலில் ரகசியமாக ஒதுங்கும் அஜித்!
அவராவது? கட்சியில சேருவதாவது? வேற ஏதாவது வேலை இருந்தா போயி பாருங்கப்பா என்கிறார்கள் அஜித்தின் பக்கத்திலிருப்பவர்கள். ஆனால் அவர்களுக்கே கூடத் தெரியாமல் அடிக்கடி ஒரு ஓட்டலுக்கு வருகிறார் தல..... வந்து என்ன செய்கிறாராம்? 'நாக்கு செத்துப் போன நட்சத்திரங்கள் கொஞ்சம் நீக்கு போக்குக்காக கூடுகிற ஓட்டல்தான் அது. அடிக்கடி இங்கே கும்மியடிக்கிற இவர்களாலேயே இந்த ஓட்டல் இப்போது ரொம்ப ஃபேமஸ். வருகிற எல்லாரும் கூடுகிற இடத்தில் அமர்வதில்லை தல. ஆனால் அதே ஓட்டலில் ஒதுங்கும் இவர் மேற்படி நட்சத்திரங்களின் வழக்கமான ஆட்டங்களையோ, அலட்டல்களையோ முகம் கொடுத்துக் கூட கவனிப்பதில்லை. ஓட்டலுக்குள் நுழைந்துவிடும் அவர், தனது லேப் டாப்பை திறந்து வைத்துக் கொண்டு யாரிடமோ சாட் செய்கிறார். மணிக்கணக்கில் நீள்கிறதாம் இந்த சாட்டிங். எப்பவோ வந்தார். சாட் செய்தார் என்றால் பெரிய விஷயமில்லை. சுமார் ஒரு வாரமாக வந்து போவதால்தான் மண்டையை பிய்த்துக் கொள்கிறார்கள் இதைத் தொடர்ந்து கவனிப்பவர்கள். துணைக்கு ஆள் இல்லாமல், ரகசியமாக லேப் டாப்பில் கதைக்கிறார் என்றால் பின்னணியில் ஏதோ கதையிருக்கு. அது அரசியலா இருக்குமோ? நம்ம அல்டிமேட்டுக்கு அடுத்தவங்கள குழப்புறதுல அப்படி என்னதான் அலாதி பிரியமோ.......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment