Friday, October 1, 2010

விளம்பரத்துக்காக சென்னை வந்த நயந்தாரா

நயன்தாரா-பிரபுதேவா காதல் தீவிரமாகி உள்ளது. இருவரும் திருமணத்துக்கு தயாராகின்றனர். திருப்பதி கோவிலில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். பிரபுதேவா மனைவி ரம்லத் இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். பெண்கள் சங்கங்களும் கண்டித்து உள்ளன. நயன்தாராவுக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்று ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது. இந்த நிலையில் விளம்பர படமொன்றில் நடிப்பதற்காக நேற்று நயன்தாரா சென்னை வந்தார். ரகசிய இடத்தில் தங்கி இருந்தார். கேளம்பாக்கத்தில உள்ள ஒரு ஸ்டுடியோவில் நேற்று காலை படப்பிடிப்புத் தொடங்கியது. அதில் பங்கேற்று நடித்தார். 3 நாட்கள் இந்தப் படப்பிடிப்பு நடக்கிறது. சென்னையில் உள்ள பிரபல ஜவுளி விற்பனை நிறுவனம் இந்த விளம்பரப் படத்தைத் தயாரிக்கிறது. நயன்தாரா விளம்பரப் படங்களில் இதுவரை நடித்தது இல்லை. பெரிய நிறுவனங்கள் அவரை அணுகிய போதெல்லாம் மறுத்து வந்தார். தற்போது முதல் தடவையாக விளம்பரப் படத்தில் நடிக்கிறார். பிரபுதேவா செலவுகளை நயன்தாரா கவனித்துக் கொள்வதாக செய்திகள் பரவியுள்ளன. இதனால் அவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவேதான் விளம்பரப் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் என்கின்றனர். படப்பிடிப்பில் ரம்லத் மற்றும் பெண்கள் சங்கத்தினர் புகுந்து ரகளையில் ஈடுபடலாம் என யூகம் நிலவுகிறது. எனவே நயன்தாராவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. தனியார் செக்யூரிட்டிகள் படப்பிடிப்பை சுற்றி நிறுத்தப்பட்டு உள்ளனர். பிரபுதேவா 'உருமி' படத்தில் நடிக்க ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார். ஓரிரு நாட்களில் அவரும் சென்னை வருகிறார். ரம்லத்திடம் திருமணத்துக்கு சம்மதம் கேட்டு பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவர் சம்மதிப்பாரா என்று உறுதியாக தெரியவில்லை. ரம்லத்துக்கு ரூ.3 கோடியும், அண்ணாநகரில் உள்ள வீட்டையும் கொடுத்து சமரசம் செய்து விட்டதாக ஏற்கனவே வதந்தி பரவியது. நயன்தாரா ரூ.85 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லசை பிரபுதேவா மூலம் ரம்லத்துக்கு கொடுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இதையெல்லாம் ரம்லத் மறுத்துள்ளார். சிறகொடிஞ்ச பறவை கீழே விழுந்துதானே ஆகணும்!

No comments:

Post a Comment