சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தீபிகா படுகோன் நேற்று சென்னை வந்தார். பூந்தமல்லி சாலையில் உள்ள ஹலோ எப்.எம். அலுவலகத்துக்கு சென்று நேயர்களுடன் கலந்துரையாடினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி. பெண்கள் வைஷ்ணவா கல்லூரிக்கும் சென்றார். மாணவிகள் தீபிகாவை பார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அவர்களை நோக்கி கையசைத்தார். பின்னர் தீபிகா படுகோன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- சென்னை மறக்க முடியாத இடம். இங்கு வரும்போது பழைய நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன. மாடலிங்கில் இருந்தபோது பலமுறை வந்து இருக்கிறேன். இங்குள்ள கடற்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். மும்பையில் உள்ள ஜமுகி பீச்சோடு இதை ஒப்பிட விரும்பவில்லை. சென்னை என்னை ஈர்ப்பதற்கு இன்னொரு காரணம் ரஜினி இங்கு இருப்பதால். ரஜினியுடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டுமென்று ஆர்வமாக இருக்கிறேன். ரஜினி சாருடன் நடித்தால் என் நடிப்பு வாழ்க்கைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தமாதிரி. இந்தியில் த்ரில்லர் படமொன்றில் நடித்து வருகிறேன். இது டிசம்பரில் வெளியாகும். மேலும் சில படங்களில் நடிக்கிறேன். சினிமாவுக்கு வந்து கொஞ்ச காலம்தான் ஆகிறது. இதற்குள் வித்தியாசமான நிறைய கேரக்டர்களில் நடித்துவிட்டேன். ஐ.பி.எல். கிரிக்கெட் அணியை வாங்கப்போவதாக வதந்திகள் பரவியுள்ளன. அதில் உண்மை இல்லை. எனக்கு விளையாட்டு பிடிக்கும் அவ்வளவுதான். சூப்பர் ஸ்டார் அடுத்து நடிப்பாரான்னே தெரியல..... அதுக்குள்ள எப்டியெல்லாம் பிளான் பண்றாங்கப்பா!
No comments:
Post a Comment