நடிகர் சரத்குமாருக்கு பொண்ணு பார்க்கும் படலம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இது படத்துக்காகதாங்க. சரத்குமார்-சினேகா நடிக்கும் படம் 'விடியல்'. செல்வராஜ் இயக்குகிறார். இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்து, இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அம்பாசமுத்திரம் பகுதியில் நடக்க இருக்கிறது. இதற்கிடையில் சரத்குமாருக்கு இன்னொரு கதாநாயகி தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி இயக்குநர் செல்வராஜ் கூறியதாவது: படத்தின் கதை 1946, 1976, 2010 என மூன்று கால கட்டங்களில் நடக்கிறது. சரத்குமார் இரண்டு வேடங்களிலும் மூன்று தோற்றங்களிலும் நடிக்கிறார். இளம் வயது சரத்குமாருக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். அந்த படப்பிடிப்பு ஓரளவு முடிந்திருக்கிறது. கதாநாயகன் 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி பிறக்கிறார். அவரது பெயர் சுதந்திரம். முதல் தலைமுறை சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகி தேடிக் கொண்டிருக்கிறோம். முன்னணி கதாநாயகிகளுடன் பேசி வருகிறோம். புதுமுகங்கள் தேர்வும் நடக்கிறது. ரவிக்கை அணியாமல் நடிக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. இதெல்லாம் ஒரு மேட்டரா.... எதுவுமே போடாம கூட நடிக்க இங்க ஆளுங்க இருக்குறாங்களே......
No comments:
Post a Comment