திடீர் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறதாம் த்ரி இடியட்ஸ்! காதும் காதும் வச்ச மாதிரி கசியும் இந்த செய்தி பற்றி கவலைப்படத் தேவையில்லை ஷங்கரின் ரசிகர்கள். ஏனென்றால் இதே விஜய்யுடன் இணைந்து தனது பயணத்தைத் தொடரப் போகிறாராம் அவர். அப்படின்னா த்ரி இடியட்ஸ்? அது 'வரும்.... ஆனா வராது' கதைதானாம் இப்போதைக்கு! எந்திரன் படத்தை விநியோகம் செய்தது ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம்தான். இவர்களது தயாரிப்புதான் த்ரி இடியட்ஸ். இந்தப் படத்துக்காக முக்கால் கிணறு தாண்டியிருந்தார்கள் ஷங்கரும் மற்றும் அவரது இயக்கத்தில் நடிக்கத் தயாராக இருந்த கதாநாயகர்களும். இந்த நிலையில்தான் திடீரென்று தனது தயாரிப்பு முயற்சியை தள்ளிப் போட்டிருக்கிறது ஜெமினி. விஜய்யின் தேதிகளை வேஸ்ட் பண்ண வேண்டாம் என்று முடிவெடுத்த ஷங்கர் அதிரடியாக ஒரு மசாலா படத்தைத் தர முடிவெடுத்திருப்பதாகத் தகவல். இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிப்பதாகவும் செய்திகள் கசிகிறது. நமக்கே இப்படி ஒரு செய்தி கசியும்போது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ஜீவாவுக்குத் தெரியாதா? ஷங்கரின் படத்தில் நடிக்கிறோம் என்ற சந்தோஷத்திலிருந்தவர், இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவசரம் அவசரமாக சென்று விஜய்யை சந்தித்தாராம்! இருவரும் என்ன பேசினார்கள்? என்ன முடிவெடுக்கப்பட்டது என்பதெல்லாம் சில தினங்களில் வெளியே தெரிய வரும். பிரம்மாண்ட மசாலானு சொல்லிப்புட்டு கிண்டுனதயே கலர்ஃபுல்லாக்கி கொடுத்துடாதீங்க........
11 Oct 2010
No comments:
Post a Comment