Thursday, October 14, 2010

மந்திர புன்னகைக்காக காத்திருக்கும் மீனாட்சி

'மந்திர புன்னகை'யில் நடித்து வருகிறார் மீனாட்சி. அவர் கூறியது: கரு பழனியப்பன் இயக்கி நடிக்கும் 'மந்திர புன்னகை' படத்தில், நந்தினி என்ற கதாபாத்திரம் ஏற்றிருக்கிறேன். ஆணுக்குப் பெண் சமம் என்ற போராட்ட குணம் கொண்ட கேரக்டர். 'கருப்பசாமி குத்தகைதாரர்' படத்துக்குப் பிறகு எனக்கு நல்ல படங்கள் அமையவில்லை. வந்த எல்லா வாய்ப்புகளுமே கிளாமர் வேடங்கள்தான். 'மந்திர புன்னகை' படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்டது. எப்போது வெளியாகும் என்று காத்திருக்கிறேன். அடுத்த மாதம் படத்தின் பாடல்கள் வெளியாகிறது. படம் பார்ப்பவர்கள் 'இது மீனாட்சியா?' என்று கேட்கும் அளவுக்கு என்னை அந்த கதாபாத்திரமாகவே மாற்றி இருக்கிறார் இயக்குநர். வேறு கதைகள் வந்தாலும் அதை ஏற்காமல் காத்திருக்கிறேன். ஏனென்றால் அந்தப் படம் எனக்கு ஒரு புது இமேஜ் தரும். மேலும் வாய்ப்பு தேடி நான் என்றைக்கும் அலைந்தது கிடையாது. என்னைத் தேடி என்ன வாய்ப்பு வருகிறதோ அதைத் தேர்வு செய்து நடிக்கிறேன். இமேஜ் டெவலப்பானா சம்பளத்த ஏத்தலாமேனு வெயிட் பண்றாங்களோ......

No comments:

Post a Comment