Thursday, October 14, 2010

பாடகி ஆவாரா கனிகா?

நடிகை கனிகாவை ஞாபகம் இருக்கிறதா? ஃபைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமாகி, கடைசியாக பழசிராஜா படத்தில் நடித்துவிட்டு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகியிருக்கிறாரே அதே கனிகாதான். அம்மணி அமெரிக்காவில் நட்பின் அடிப்படையில் விடப்படும் வேண்டுகோள்களை ஏற்று மேடையில் ஒரு சில பாடல்கள் பாடிவருகிறாராம். முன்னாடியே பாடல்கள் பாடுவதில் ஆர்வம் இருந்தாலும் நடிப்பில் கவனம் செலுத்துவதற்காக அடக்கி வாசித்தாராம். இப்போது நடிக்கவில்லை என்பதால் சினிமாவில் பாடுவதற்காகத் தயாராக இருக்கிறாராம். வாய்ப்புக் கிடைத்தால் பாடவும் தயாராம். முன்னணி இசையமைப்பாளர்களே கனிகாவின் கனவை நிறைவேற்றுவதற்கு கொஞ்சம் தயவுபண்ணுங்கள். இந்த குயிலுக்கு யாரு குடைபிடிக்கப் போறாங்களோ.........?

No comments:

Post a Comment