Saturday, October 9, 2010

பெஞ்ச் டயலாக்


1. "படம் முழுக்க ஹீரோ ஒரு பெஞ்ச்ல உக்காந்து வசனம் பேசிக்கிட்டே இருக்காரே...
ஏன்?"
"அவரு "பெஞ்ச் டயலாக்" பேசறாராம்...!"

2. "என்னங்க இது... கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க..."
"நான்தான் அப்பவே சொன்னேனே... பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!"

3. "என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

4. "என்னங்க... ரசத்துல புளியே போடலை; ஒண்ணும் சொல்லாம சாப்பிடறீங்களே..?"
"நீ சமைக்கப் போறேன்னு சொன்னதே என் வயித்துல புளியைக் கரைச்ச மாதிரி இருக்கு... அதான்!"


 

No comments:

Post a Comment